(பைஷல் இஸ்மாயில், றிஸ்கான்)
பிரதம மந்திரி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நல்லெண்ண மனப்பான்மைகளை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட 'நல்லதோர் உள்ளம். பலமிக்கதோர் நாடு' எனும் தொனிப்பொருளில் சித்திரம், மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடாத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் அம்பாறை ஹாடி தொழிநுட்பக் கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.
பிரதம மந்திரியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.எச்.ஜீ.பண்டார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொலைத் தொடர்புகள், மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் றஞ்சித் சியம்பலாப் பிட்டிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டடு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசும், சான்றிதழ் என்பன வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், நிந்தவூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமாலெவ்வை உள்ளிட்ட உள்ளுர் அரசியல் பிரமுகர்கள், உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment