இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்பட அனுமதிக்கக் கூடாது -அமெரிக்கத் தூதுவர்

இலங்கையில் அதிகரித்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகள் குறித்து எச்சரித்துள்ள அமெரிக்கத் தூதுவர், இந்த உணர்வுகள் முஸ்லிம்களை வதைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படும் வெளிநாட்டுச் செய்தியாளர்களை அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், நேற்று சந்தித்துப் பேசினார்.

சிங்கள பௌத்த தேசியவாதக் குழுக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வெறுக்கத்தக்க உரைகள், இழிவுபடுத்தல்கள், முஸ்லிம்களின் வணிகம் மற்றும் வழிபாட்டு இடங்களின் மீதான தாக்குதல்களின் பின்னணியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளான பின்னரும் தொடரும் உள்ளூர் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் குறித்தும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான எண்ணற்ற கொலைகள், ஆட்கடத்தல்கள், தாக்குதல்களை அதிகாரிகள் தடுக்க இயலாதுள்ளமை குறித்தும் அமெரிக்கத் தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :