கவனிப்பார் அற்று உடைந்து கிடக்கும் அட்டாளைச்சேனை கல்லோயாப்பாலம்.

 சப்னி அஹமட்
ட்டாளைச்சேனையில் கொட்டுப்பாலம் என்று அழைக்கப்படும் கல்லோயாப்பாலம் கடந்த மாதம் உடைந்து வாகனங்கள் பயணிக்க முடியாமலும் பொதுமக்கள் அச்சத்துடனும் பயனிக்கும் நிலையில் இருப்பது கவலையளிக்கிறது.

பல தடவைகள் உரியவர்களுக்கு எடுத்துக்கூறியும் இதுவரைம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.

உடைந்திருக்கும் பாதைக்கு கீழே குடி நீர் குழாய் பொருத்தப்பட்டிருப்பதும் அதுவும் சேர்ந்து உடையும் நிலமையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், நீர்வளங்கள் சபையினர் இம்மூன்று சபைகளிலும் இருந்து இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பதன் காரணம் அறியாமல் மக்கள் இன்னும் யாரிடம் முறையிடுவது என்று விசனத்தில் உள்ளனர்.

எனவே இந்த உடைந்த பாலத்தின் வீதியினை உடனடியாக செய்வதற்க்கு ஏற்பாடு செய்வார்களா ..? பொருப்புடையோர் இது அவர்களின் கவனத்திற்க்கு இம்போட்மிரர் எடுத்துக் காட்டுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :