மாளிகைக்காடு றெயின்போ பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை அறிமுக விழா.


(எஸ்.அஷ்ரப்கான்)

மாளிகைக்காடு றெயின்போ பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை அறிமுக விழா
நேற்று (07.04.2013) ஞாயிற்றுக்கிழமை பாலர் பாடசாலையில் ஏ.எம். அஹூவர்
ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, மாணவர்களினால் பாடசாலை சீருடை அறிமுகம் செய்து
வைக்கப்பட்டதுடன்,  இப்பாலர் பாடசாலையின் சகல மாணவர்களுக்கும் சீருடைகள்
அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பாலர் பாடசாலை மிகவும் சதுப்பு நிலமாககக் காணப்பட்ட தோணா
அமைந்திருந்த இடத்தில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பாயிஸ்
அவர்களின் அயராத முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டு மிக நீண்டகாலத்தேவையாக
இருந்த பாலர் பாடசாலை இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக
பிரதேச மக்கள் உறுப்பினர் பாயிஸிற்கு தங்கள் மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கின்றனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன்
அவர்களும், கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பாயிஸ்,
விசேட அதிதிகளாக மாளிகைக்காடு அல்- ஹூசைன் வித்தியாலய அதிபர்
ஏ.எல்.எம்.ஏ. நளீர், பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் கே.எம். ஜௌபர்,
அம்பாரை மாவட்ட செயலக அபிவிருத்தி உதவியாளர் ஏ.எல்.ஏ. நஜீபர், ஆசிரியர்
ஜெஸீல், றெயின்போ பாலர் பாடசாலையின் பெற்றார் சங்க தலைவர் கே.எஸ். பரீட்,
பாலர் பாடசாலையின் விசேட ஆலோசகர் எம்.எச்.எம். தாரிக் மற்றும்
மாளிகைக்காடு அந்நுார் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் ஏ. பைஸர் உட்பட பாடசாலை
மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :