கடந்த வருடம் நடைபெற்ற கல்விப்பொதுத் தராதரப்பரீட்சையின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகிய செய்தி கேட்ட உடனே அனைவரும் இணையங்களிலும் கையடக்க தொலைபேசிகளிலும் அவசர அவசரமாக தத்தமது பெறுபேறுகளைப் பார்ப்பதற்க்கு அவசரப்பட்டுக்கொண்டிருந்தனர்.
சிலர் சிறந்த சித்தியும், சிலர் சாதாரண சித்தியும், இன்னும் சிலர் சித்தி பெறாமலும் இருப்பது நடப்புகளில் ஒன்று. ஆனால் இதனைத் தாங்கிக்கொள்ளாத ஒரு மாணவனின் தந்தை தூக்கிட்டுத் தொங்கி மரணித்த செய்திதான் கவலையளிக்கிறது.
மரணித்தவர் ஹற்றன் வட்டவல பகுதியைச்சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்றுதான் இந்த சிந்திக்காதவர்கள் தங்களைத் திருத்திக்கொள்வார்கள் என்பது புரியாத ஒன்றாகவே இருக்கிறது.
ஆனாலும் பிள்ளைகள் தங்களைப்பெற்றவர்களின் மனங்களைப்புரியாதவர்களாகவும் வீண் விளையாட்டிலும் பல பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பவர்களாகவும் இருப்பதனை விட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல பிரஜைகளாக மாறவேண்டும்.
0 comments :
Post a Comment