பாராளுமன்றத்தில் ஆற்றப்படும் எனது உரையை தமிழ் ஊடகங்கள் சரியாக பிரசுரிக்க வேண்டும். இல்லையேல் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்புவேன் என்று ஆளும் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான ஏ.எச்.எம்.அஸ்வர் சம்பந்தன் உரைக்கு ஒரு முறை அல்ல ஆயிரம் தடவையும் இடையூறுகளை ஏற்படுத்துவேன் என்றும் சபையில் சூளுரைத்தார்.பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அமர்வில் இடம்பெற்ற உண்ணாட்டர சிறை, நொத்தாரிசு, ஆவணப் பதிவு மற்றும் அற்றோனத் தத்துவம் ஆகிய திருத்தச் சட்டங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.
அஸ்வர் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
முஸ்லிம்கள் தொடர்பாக சம்பந்தன் ஆற்றிய உரைக்கு பிரதியமைச்சர் காதரும் அஸ்வர் எம்.பியும் இடையூறு ஏற்படுத்தியதாக தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது உண்மைதான் நாம் இடையூறுகளை ஏற்படுத்தினோம்.
முஸ்லிம்கள் தொடர்பில் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அருகதை இல்லாததாலும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் சரியான முறையில் அறிக்கையிடப்படாததாலுமே நாம் சம்பந்தனின் உரைக்கு இடையூறுகயையும் குறுக்கீடுகளையும் ஏற்படுத்தினோம்.
இவ்வாறான செய்திகளை வெளியிடுவதன் மூலம் நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என எம்மைக் காட்டிவிட முடியாது.
முஸ்லிம்களுக்கு எம்மைப்பற்றி நன்கு தெரியும் எமது இனத்திற்காக நாம் என்ன செய்கின்றோம் என்பதை எமது மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.
எமது புகைப்படங்கள் செய்திகள் பத்திரிகைகளில் வரவேண்டும் என்பதற்கோ தொலைக்காட்சிகளில் வெளிவர வேண்டும் என்பதற்காகவோ நாம் எதையும் செய்பவர்கள் அல்லர்.
எனினும் பாராளுமன்றத்தில் நான் ஆற்றும் உரைகள் எனது எண்ணங்களைப் புரிந்து கொண்டவாறு தமிழ் ஊடகங்கள் முழுமையாக பிரசுரிக்க வேண்டும்.
இல்லையேல் தமிழ் ஊடகங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றைக் கொண்டு வருவேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் முஸ்லிம்களைப் பற்றி தாராளமாகப் பேச முடியும். ஆனால் அதில் உண்மைகள் இருக்க வேண்டும்.
எனவே சம்பந்தன் எம்.பி.முஸ்லிம்களைப் பற்றி பேசினால் ஒரு தடவை அல்ல ஆயிரம் தடவை இடையூறுகளையும் குறுக்கீடுகளையும் ஏற்படுத்துவேன்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்களாகிய நாம் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி விடப்பட்டோம். அதனை அணைக்கவே செய்வோம்.
முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் நான் தினமும் ஜனாதிபதியுடன் பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன்.VV
0 comments :
Post a Comment