மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதை பதவி நீக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியிடம் எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என அந்த கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகான சபையின் முதலமைச்சர் தொடர்பில் சில தரப்பினரால் குற்றச்சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கிழக்கு முதலமைச்சரை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை. கிழக்கு மாகாண சபையைப் பொருத்தவரை அங்கு முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஆளுநர் வசமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அத்துடன் நஜீபின் பதவி இரண்டரை வருடங்களே. அதன் பின்னர் எமது கட்சியின் ஒருவரே முதலைமைச்சராக தெரிவாவார். அப்போது நாம் எமது அதிகாரங்களை பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment