(எம்.பைஷல் இஸ்மாயில்)
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஹலால் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருப்பதா? அல்லது இல்லையா? என்ற இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினருமாகிய என்.ரீ.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த உப குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் அடிப்படைத் திட்டங்கள் பற்றி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.
இது சம்பந்தமாக அரசாங்கத் தரப்புடன் மிக விரிவாக கலந்துரையாடியுள்ளோம்.
எனினும் அதற்கு எவ்விதமான உரிய முடிவுகளுக்கும் வரமுடியாமல் போனமை பற்றி கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு, முஸ்லிம் காங்கிரஸூக்கு முஸ்லிம் சமூகத்திடம் இருந்து பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அது தொடர்பில் பொது மக்களுக்கு பதிலளித்துள்ள அவர், மேற்குறிப்பிட்ட இவ்வாறான கோரிக்கைகளை தாம் முன் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள முடியும். என எதிர்பார்க்கிறோம் என்றார்.
0 comments :
Post a Comment