நாமெல்லாம் அஷ்ரப் அவர்களின் காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்கள்.வடபுலத்திலே மு.கா வை வளர்தவர்கள் வன்னி மக்கள்தான்.தேர்தல்களில் மு.கா வுக்கு வாக்களித்து அபூபக்கர் போன்றவர்களை ஆட்சி மன்றம் அனுப்பினோம்.அஷ்ரப் அந்த உதவியை இன்னும் மறக்கவில்லை வட புல மக்கள் மீது நன்றி உள்ளாவராகவே வாழ்ந்தார் நாம் 1990 ஆம் ஆண்டு பாசிச புலிகளினால் ஆயுதமுனையில் ஒரு மணி நேரத்துக்குள் வெளியேற்றப்பட்ட போது யூ.என்.பி அரசே ஆட்சி பீடத்தை அழங்கரித்துகொண்டு இருந்தும் எந்த உதவியையும் செய்யவில்லை
1994 ஆம் ஆண்டு ஆட்சி மாறியது.அஷ்ரப் அமைச்சரனார். அந்த நல்ல மனிதர் தான் தமது அடிப்படை தேவைகளை நிரைவேற்றி ஆதரவளித்தார்.அஷ்ரப் இறையடி சேர்ந்தார் அதன் பின்னரான மு.கா இன்னல் பட்ட மன்னார்,வவுனியா,யாழ்பாணம்,முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மக்கள் தொடர்பாக எந்த கரிசனையும் கொள்ளவில்லை.
மு.கா.ஒரு முஸ்லிம் சமூக கட்சி முஸ்லீம்களீன் துன்ப,துயரங்களை போக்க வேண்டிய ஒரு அமைப்பு இந்த அமைப்பு இன்னல் பட்ட மக்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தது மு.கா விலே இருக்க உயர்மட்ட,கீழ் மட்ட எந்த மட்ட குழுவும் எமது பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முன்வரவில்லை.ஏன் இந்த தலைவன் தமது இருப்பிடங்களின் பக்கம் காலெடுத்து வைக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்பும் தற்போதும் இந்த வட மாகாண முஸ்லிம்களுக்கு காணி,விவசாயம்,பொருளாதாரம்,கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கள் இது போன்றன பல பிரச்சினைகளுக்கு மீள் குடியேறுகின்ற போது இம் மக்கள் பல சவால்களுக்கு முகம்ங்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போதும்,ஏற்படுகின்ற போதும் இந்த முஸ்லிம் காங்கிரசின் தலமைபீடம் இம் மக்களுக்கு என்ன செய்தது என்பது இன்னும் கேள்விக்குரியாகவே உள்ளது.மக்களின் இன்னல்களை போக்க உருப்படியான ஒரு செயல் திட்டத்தினை இன்னும் அமுழ்படுத்தவும் இல்லை இனியும் அமுல் படுத்துமா?
முஸ்லிம் காங்கிரசின் தலைவர் செய்த உதவிகள் காலத்தால் மறக்க முடியாதவை.புலிகளால் ஆயுத முனையால் விரட்டியடிக்க பட்டோம்.அவ்வாறு விரட்டியமை பாரிய குற்றம் என்று வடக்கு முஸ்லிம்களுக்கு "அகதி" அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து அஷ்ரப் சர்வதேச அரங்கில் முறையிட்டார்.ஆனால் அதை மாற்றி அமைத்து புலிகளை நிரபராதி ஆக்கியவர் சகோதரர் ரவூப் ஹக்கீம். ஒஸ்லோவில் நடந்த இனப்பிரச்சினை பேச்சின் போது வட மாகாண அகதி மக்கள் தொடர்பாக உறுப்படியாக அவர் எதையும் பேசவில்லை.புலிகளின் பசப்பு வார்தைகளை நம்பினார்.அகதிகளாகிய நாம் இதை மறக்க முடியுமா?
0 comments :
Post a Comment