சர்தேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவதன் முன்னர் 'ஸ்ரீலங்கா கிரிக்கெட்' டின் தேர்தல்களை நடந்த தவறினால் இலங்கை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்தது.
முன்னர் வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இலங்கை கேட்டதற்கு இணங்க 2013 ஆம் ஆண்டு யூலை வரை நீடிக்கப்பட்டது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேர்தல்களை நடத்த இலங்கை போதிய காலத்தை ஐ.சி.சி கொடுத்துவிட்டது. ஆனால் இலங்கை இடைக்கால குழுவை தொடர்வதில் பிடிவாதமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் அடிப்படையில் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவை விடுத்து தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் என்பதில் ஐ.சி.சி அக்கறையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment