(எஸ்.அஷ்ரப்கான்)
பொதுபல சேன, சிங்கள ராவய , ரவண பலய ஆகிய சிங்கள தீவிரவாத அமைப்புக்களை
தடைசெய்வதற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ
நாணயக்கார எடுக்கின்ற முயற்சியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
வரவேற்கின்றது. என்று கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட்
கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொலிசாரின் அசமந்தப் போக்கு காரணமாகவே இந்த இனவாதிகளின் செயற்பாடுகள்
வளர்ந்துகொண்டு வருகின்றது. என்ற அமைச்சர் வாசுதேவவின் நிதர்சனக் கூற்றை
பாராட்டுகின்றோம். அதேநேரம் எமது கட்சி இரண்டு சந்தர்ப்பங்களில் அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார, அமைச்சர் திஸ்ஸவிதாரண, டியு குணசேகர ஆகியோரிடம்
நேரடியாக முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேச சக்திகளுக்கு எதிராக நீங்கள்
குரல் கொடுக்க வேண்டுமென்று வேண்டியிருந்ததை இந்த இடத்தில் ஞாபகமூட்ட
விரும்புகின்றேன். “முஸ்லிம் தலைமைகள் இன்றைய நிலவரம் தொடர்பாக வெளியில்
உரத்துப்பேசவில்லை. என்கின்ற ஒரு கவலை அல்லது அதிருப்தி முஸ்லிம்
சமூகத்திற்கு மத்தியில் நிலவுகின்றது”. ஆனால் நாம் உள்ளக அரங்குகளில்
உரத்துக் குரல் கொடுப்பது எமது மக்களின் காதுகளுக்கு வேண்டுமானால்
கேட்காமல் இருக்கலாம்.
ஆனால் உங்களின் காதுகளில்
ரீங்காரமி்ட்டுக்கொண்டிருக்கும்
வழிநடாத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களும் உள்ளன. மக்கள் தலைமைகளால்
வழிநடாத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களும் உள்ளன. இன்றைய சூழ்நிலை மக்கள்
உணர்ச்சி வசப்பட்டு இருக்கின்ற நிலையாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில்
மக்கள் எதைக் கூறினாலும் மக்களை தலைமைகள் வழிநடாத்தியாக வேண்டும். இன்றைய
இனத்துவேச விவகாரம் இரு சமூகங்கள் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால்
தலைமைகள் நிதானமாக நடக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
சற்றுச்சறுகினாலும்
அது ஒரு பாரிய இனக்கலவரத்தில் முடியலாம். அதற்காக என்றுமே நிதானம் என்ற
போர்வையில் மௌனம் காக்கவும் முடியாது. தலைக்கு மேல் வெள்ளம் செல்லத்தான்
போகிறது என்றால் சாணைப் பற்றியோ முழத்தைப் பற்றியோ யோசிக்க முடியாது.
அதற்காக அதுவே ஆரம்பப்படியாகவும் இருக்க முடியாது. எனவே, நாம் அரசுக்குள்
அழுத்தங்களைக் கொடுக்கின்ற அதே வேளை நடுநிலையாகச் சிந்திக்கின்ற இன
வேறுபாடுகளுக்கப்பால் செயற்படுகின்ற இடதுசாரித்தலைவர்களாகிய நீங்கள் இந்த
இனவாதிகளுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுக்க வேண்டுமென்று அன்று
வேண்டியிருந்தோம். அதனை இந்த இடது சாரித்தலைவர்கள்
ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக அமைச்சர் திஸ்ஸவிதாரண எமது வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு, இது
முஸ்லிம் தலைவர்கள் பேசுகின்ற தருணமல்ல. அப்பணியை நாங்கள் செய்கின்றோம்
என்று கூறி, சில சந்தர்ப்பங்களில் குரலும் கொடுத்தார்கள். இருப்பினும்
அவர்கள் போதுமான அளவு குரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் எமக்கு இருந்தது.
அந்தவகையில் சமூக நல்லிணக்க அமைச்சர் என்ற முறையில் இவ்வமைப்புக்களை
தடைசெய்ய எடுக்கின்ற காத்திரமான நடவடிக்கையை மனதார பாராட்டுகின்றோம்.
பொலிசார் அமைச்சர் குறிப்பிட்டதுபோன்று ஆரம்பத்திலேயே அக்கறையோடு தமது
கடமைகளைச் செய்திருந்தால் விடயம் இவ்வளவு துாரம் முற்றி பெஷன் பக்
களஞ்சியசாலை தாக்கப்படுகின்ற அளவிற்குச் சென்றிருக்காது. இன்று பெஷன் பக்
களஞ்சிய சாலையைத் தாக்கியவர்களை கைது செய்ய முடிந்த பொலிசார் அன்று
பள்ளிவாசல்களைத் தாக்கியவர்களை கைது செய்திருந்தால் அல்லது தெமட
கொடயில் மாடு அறுக்கும் மடுவத்திற்குள் பலாத்காரமாய் புகுந்த காவியுடை
தரித்தவர்களை கைது செய்திருந்தால் அல்லது இஸ்லாத்தை அவமானப்படுத்தி
ஊர்வலம் சென்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியிந்தால் இன்று நிலைமை
விஸ்வரூபம் எடுத்திருக்க மாட்டாது.
காவியுடை அணிந்து எதைச் செய்தாலும் சட்டத்தின் கரங்கள் துாரேதான்
இருக்கும் என்ற மனப்பாங்கோடு பொலிசார் செயற்பட்டதன் காரணமாக அதே
காவியுடை தரித்துக்கொண்டு பெஷன் பக் களஞ்சியசாலையை தாக்குகின்ற தைரியம்
அவர்களுக்கு வந்துவிட்டது.
பொதுபல சேனாவிற்கு ஒத்தடம் கொடுப்பதுபோல மொபிடெல் நிறுவனம் அவர்களது
அழைப்பொலியை (றிங்கிங் டோன்) அறிமுகப்படுத்தி ஒவ்வொரு
வாடிக்கையாளர்களிடமும் மாதம் 30 ரூபாவை அறவிட்டுக் கொடுக்க இருக்கின்றது.
இந்தப் பணத்தைப்பெற்று பொது பல சேனா என்ன செய்யப்போகின்றது ?
முஸ்லிம்களுக்கு எதிரான தனது பிரச்சாரத்தைத்தான் தீவிரப்படுத்தப்
போகின்றது. இந்த பணத்தைப் பெறுவதற்காகவே அவர்கள் தமது வெறுப்புப்
பிரச்சாரத்தை நடத்த முற்படுவார்கள்.
மொபிடெல் நிறுவனம் ஒரு அரச நிறுவனமாகும். எனவே ஒரு அரச நிறுவனம் இந்த
வசதியை பொதுபல சேனாவக்கு செய்து கொடுக்கின்றபொழுது ஒரு சிறு குழந்தை கூட
பொதுபல சேனா அரசின் பின்னனியிலேயே செயற்படுகின்றது. என்று நினைப்பதை
தவிர்க்க முடியாது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தி அரசிற்கும், இந்த தீவிரவாதக்
குழுக்களுக்கும் தொடர்பில்லை என்று கூறுவதனால் மாத்திரம் முழுப்
பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்துவிட முடியாது. என்ற கருத்து நிலவுவதை
தடுத்து நிறுத்த முடியாது. மட்டுமல்ல, சர்வதேச சமூகங்களின் பார்வையையும்
மாற்றிவிட முடியாது.
ஏற்கனவே இந்த வெறுப்புப் பிரச்சாரம் 100 வீத சிங்கள மக்களையும்
ஆட்கொள்ளவில்லை. என்றபோதும் கூட கணிசமான அளவு துாரம் சிங்கள மக்களுக்கு
மத்தியில் ஊடுருவி இருக்கின்றது. என்பதை மறுப்பதற்கில்லை.
கடந்த சில மாதங்களாக நடைபெற்ற இந்த இனவாதப் பிரச்சாரத்தினால்
முஸ்லிம்களின் உள்ளம் ரணகளமாகியிருக்கின்றது. இந்த ரணம் இலகுவில் ஆறிவிட
மாட்டாது. ஏனெனில் இந்த இனவாதிகள் வீசிய சொல் அம்புகள் அவ்வளவு ஆழமாகப்
பாய்ந்திருக்கின்றது.
எது எவ்வாறு இருப்பினும் நாம் நடந்ததை எல்லாம் ஒதுக்கி வைக்கத்தயாராக
இருக்கின்றோம். மறந்துவிட முடியாது என்றபோதிலும் கூட, ஆனால் அரசாங்கம்
உடனடியாக மொபிடெல் நிறுவனம் பொதுபல சேனாவிற்கு அழைப்பொலி (றிங்கிங் டோன்)
அறிமுகத்தினுாடாக ஒவ்வொரு வாடிக்கையளருக்கும் மாதம் ஒன்றுக்கு 30
ரூபாய்கள் வீதம் பல மில்லியன் கணக்கில் வழங்கப்பட இருக்கின்ற அந்த
ஒத்தாசையை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் மொத்த
முஸ்லிம்களும் மொபிடெல் பாவனையை விலக்கிக்கொள்ள நாம் பகிரங்க அழைப்பு
விடுக்க வேண்டிவரும். அத்தோடு பொதுபல சேனா போன்ற சகல தீவிரவாதக்
குழுக்களையும் உடனடியாகத் தடைசெய்து அவர்களின் செயற்பாட்டிற்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என்பதோடு, முஸ்லிம் நிறுவனங்கள் மீது
தாக்கதல் நடாத்திய அத்தனை பேரையும் கைது செய்து சட்டத்தின் முன்
நிறுத்தவேண்டும்.
பொலிசாரின் செயற்பாடின்மை இயற்கையானதா ? செயற்கையானதா ? என்ற வாதப்
பிரதிவாதங்களுக்குள் நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பொலிசாரின்
செயற்பாடுகளுக்கு அரசே பொறுப்பாகும்.
எனவே, அரசு இனியும் தாமதம் காட்டாது செயலில் இறங்க வேண்டும். முஸ்லிம்
கட்சிகள் அரசோடு இருக்கின்றது. என்பதற்காக எது நடந்தாலும்
பார்த்துக்கொண்டு வாழாவிருக்கும் என்று யாரும் மனப்பால் குடிக்க
வேண்டாம்.
எமது மறைந்த தலைவர் எப்போது இணக்கப்பாட்டு அரசியல் செய்ய வேண்டும்.
எப்போது முரண்பாட்டு அரசியல் செய்ய வேண்டும். என்பதை எமக்கு
கற்றுத்தந்துள்ளார். அவரின் பாசறையில் வளர்ந்தவர்கள் நாங்கள்.
இணக்கப்பாட்டு அரசியலை விதியாகவும், முரண்பாட்டு அரசியலை விதி
விலக்காகவும் செய்வதை முஸலிம்களின் அரசியல் பாதையாகக் காட்டித்தந்து அது
தொடர்பான போதுமான பயிற்சிகளையும் வழங்கியிருக்கின்றார். நாம் இதுவரை
இணக்கப்பாட்டு அரசியல் என்ற எல்லைக்குள் இருந்துகொண்டு எமது
பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றே
முனைகின்றோம். அந்த நம்பிக்கையின் ஒரு ஒளிக்கீற்றாகவே அமைச்சர் வாசுதேவ
நாணயக்கார கொண்டுவர இருக்கின்ற அமைச்சரவைப் பத்திரத்தையும்
பார்க்கின்றோம். அதற்காக என்ன நடந்தாலும் இணக்கப்பாட்டு அரசியல் என்ற
பெயரில் பேசாமடந்தையாக இருப்போம் என்று அரசு தப்புக்கணக்கு போட்டுவிடக்
கூடாது. ஏனெனில், இணக்கப்பாட்டு அரசியல் ஒரு குறித்த எல்லையைத்
தாண்டுகின்ற பொழுது அது சரணாகதி அரசியலாக மாறிவிடுகின்றது. என்பதில்
போதுமான பயிற்சியை நாம் மறைந்த தலைமைத்துவத்திடம் பெற்றிருக்கின்றோம்.
நிச்சயமாக நாம் சரணாகதி அரசியல் செய்வதற்கு ஆயத்தமில்லை. யாரும் எம்மை
தப்புக்கணக்கு போட்டுவிட வேண்டாம். அவ்வாறான ஒரு கட்டத்தில் நாம் மிகவும்
உறுதியாக முரண்பாட்டு அரசியலை முன்னெடுப்போம். ஆரம்பமே முரண்பாட்டு
அரசியலாக கொள்கின்றவர்களை விட, இணக்கப்பாட்டு அரசியலிலிருந்து நாம்
முரண்பாட்டு அரசியலை தழுவுகின்றபோது இன்ஷா அல்லாஹ் அதன் வேகம் மிகவும்
பலமானதாக இருக்கும். ஜனநாயக வரம்பிற்குட்பட்டு சர்வதேசத்தின் எல்லையை அது
தொட்டுப் பார்க்கும்.
எனவே, அவ்வாறான ஒரு நிலைமைக்கு எங்களைத் தள்ள வேண்டாம் என்று வினயமாக
வேண்டுவதோடு, நீங்களும் நிம்மதியாக வாழுங்கள், எங்களையும் நிம்மதியாக வாழ
விடுங்கள். மாறாக எங்களது நிம்மதியைக் குழப்பி, உங்களது நிம்மதியைக்
கெடுத்துக்கொள்ள வேண்டாம். என்று கண்ணியமாக வேண்டுகி்ன்றோம்
என்றுமுள்ளது.
0 comments :
Post a Comment