நடிகர் சல்மான் கான், அவரின் வழக்குகளை பதிவு செய்ய ஒரு வெப்தளம் திறந்துள்ளார்.


 பாலிவுட் நடிகரான சல்மான் கான், ஏராளமான வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு வழங்கி திரையுலவில் கொடிகட்டிப் பறந்தார். சிறந்த நடிப்புக்காக பிலிம்பேர், பாலிவுட் திரைப்பட விருது மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

எந்த அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றாரோ, அந்த அளவுக்கு ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கி வழக்குகளை சந்தித்து வருகிறார் சல்மான் கான்.

வேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய வழக்கு, மான் வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்டார். 

இதுபோன்ற மேலும் சில வழக்குகளும் உள்ளன. சல்மான் கான் தொடர்பான வழக்குகளை ஊடகங்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கு விசாரணைகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் விவரங்களை ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு வெளிப்படையாக தெளிவுபடுத்தும் வகையில், சல்மான் கான் தனியாக இணையதளம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். www.salmankhanfiles.com என்ற இணையதளத்தில் சல்மான் கான் வழக்குகள் குறித்த விவரங்களை அவரது வழக்கறிஞர் குழு தொடர்ந்து புதுப்பித்து வரும்.

“எனக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பான தகவல்கள் சில சமயங்களில் தவறாகவும், எனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் வெளியாகின்றன. எனவே, எளிதில் அணுகக்கூடிய உண்மை தகவல்கள் இந்த இணையதளத்தில் வழங்கப்படும்” என்று சல்மான் கான் கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :