இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இந்திய அணி 102 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்களை குவித்தது. கோஹ்லி 83 பந்தில் 2 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்களை எடுத்தார். ரோகித் ஷர்மா 46, ஷிகார் தவான் 69, ரெய்னா 10, தினேஷ் கார்த்திக் 6, முரளி விஜய் 27, ஜடேஜா 2, அஸ்வின் 25 ஓட்டங்களை சேர்த்தனர்.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் டினோ பெஸ்ட் 2, ரோச், பிராவோ, சாமுவேல்ஸ், பொல்லார்டு தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
312 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் துடுப்பெடுத்தாடியது. கெய்ல் 10, பிராவோ 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கீட்டது.
மழை நின்ற பின்னர் போட்டி தொடங்கியது. 39 ஓவர்களில் 274 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் தொடர்ந்து விளையாடியது. சாமுவேல்ஸ் 6, பொல்லார்டு 0, வெயின் பிரவாவோ 14, சார்லஸ் 45, ரம்தின் 9, சம்மி 12, ரோச் 34, நரேன் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 34 ஓவரில் 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் டக்வொர்த் லிவீஸ் விதிப்படி இந்திய அணி 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ் தலா 3, ஜடேஜா, இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது கோஹ்லிக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணிக்கு இது முதல் வெற்றியாகும்.
இதன் மூலம் இந்திய அணி இறுதி சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா 9ந் திகதி இலங்கையை எதிர்த்து விளையாடவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இது முதல் தோல்வியாகும். அந்த அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment