இலங்கை - இந்திய உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ள செய்தியை பஷில் ராஜபக்ஷ குர்ஷித்திடம் தெரிவித்துள்ளார்.
13வது அரசியலமைப்பு சட்ட மூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் சல்மான் குர்ஷித் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13வது அரசியலமைப்பு சட்டமூலத்தை வலுவிலக்கச் செய்யும் வகையில் இலங்கை செயற்படக் கூடாது என சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment