கொழும்பு - அவிசாவளை பழைய பிரதான வீதியின் ஒருகொடவத்தை அம்பத்தலே வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் அங்கொட தொடக்கம் அம்பத்தலே சந்திவரையான வீதியை 15 நாட்களுக்கு மூடிவைக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
நாளை (20) தொடக்கம் எதிர்வரும் 15 நாட்களுக்கு குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
அதனால் அவிசாவளையில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் கடுவல - பத்தரமுல்ல ஊடாக கொழும்பை சென்றடைய முடியும்.
ஏனைய வாகனங்கள் அம்பத்தல சந்தியில் பழைய தொட்டலங்க வீதியில் சென்று களனிமுல்ல வழியாக அங்கொட சந்திக்குச் சென்று கொழும்பை சென்றடைய முடியும்.
கொழும்பில் இருந்து அவிசாவளை செல்லும் வாகனங்கள் கொட்டிகாவத்தை சந்தியில் கொஹிலவத்த சந்திக்கு சென்று அல்லது அம்பத்தலேவுக்குச் சென்று அவிசாவளைக்கு பயணிக்க முடியும்.
0 comments :
Post a Comment