தென்னாபிரிக்க அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி அமோக வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (20) பகலிரவு போட்டியாக இடம்பெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 180 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, குமார் சங்கக்காரவின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 169 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் தரங்க 43, ஜயவர்த்தன 42 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 31.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 180 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
தென்னாபிரிக்கா சார்பில் துடுப்பாட்டத்தில் எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை.
பந்துவீச்சில் இலங்கை அணியின் பெரேரா, ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் தில்ஷான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.
இதன்படி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1ற்கு பூச்சியம் என்ற கணக்கில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.
0 comments :
Post a Comment