25000 ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளையே காமுகன் ஒருவனுக்கு இறையாக்கிவிட்டு காவல் இருந்துள்ளார் ஒரு பெண். பதறவைக்கும் இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் கோமதி, இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின் கோமதி தஞ்சாவூர் ரெட்டியார்பாளையத்தில் வசிக்கிறார்.
இவரது மூத்த மகள் 12ஆம் வகுப்பு படிக்கிறார். தன்னுடைய தாயின் நடவடிக்கை பிடிக்காததால் 2வது மகள் பவித்ரா தனது பெரியம்மா வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.
அதே ஊரைச் சேர்ந்த டெய்லர் லெட்சுமணன் கோமதிக்கு உறவினர். இந்நிலையில் தன் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொடுப்பதாக கூறி லெட்சுமணனிடமிருந்து 25,000 ரூபாய் வாங்கியுள்ளார் கோமதி.
இந்த திருமணத்திற்கு பவித்ரா சம்மதிக்கவில்லை. படித்து டாக்ராக வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் கோமதியோ, இதற்கு மேல் உன்னை என்னால் படிக்க வைக்க முடியாது, ஒழுங்காக என் பேச்சைக் கேட்டு திருமணத்திற்கு ஒத்துக்கொள் என்று தினமும் கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார்.
இந்நிலையில், உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடு அல்லது பணத்தை திருப்பி கொடு என்று லட்சுமணன் ஒரு புறம் டார்ச்சர் செய்து வந்தாராம். இதையடுத்து கடந்த 7ஆம் திகதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மைனர் பெண்ணிற்கு திருமணம் நடப்பதாக பொலிசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து பொலிசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
தனது திட்டம் நிறைவேறாததால் ஆத்திரமடைந்த கோமதி, என் வீட்டுக்கு வந்து என் மகளை பலாத்காரம் செய்து விடு. வேறு வழியில்லாமல் உன்னை திருமணம் செய்ய சம்மதித்து விடுவாள் என்று லெட்சுமணனுக்கு ஐடியா கூறியுள்ளார்.
அதன்படி, கடந்த 9ஆம் திகதி இரவு கோமதி வீட்டுக்கு வந்த லெட்சுமணனை, பவித்ராவின் அறைக்கு அனுப்பிவிட்டு வெளிப்பக்கமாக கதவை தாழிட்டுக் காவலுக்கு உட்கார்ந்திருக்கிறார் கோமதி.
உள்ளே சென்ற லெட்சுமணன் சிறுமியை கத்தி முனையில் மிரட்டி வாயைப் பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலை நடந்த சம்பவத்தை தன் உறவினர்களிடம் சிறுமி கூறியிருக்கிறார்.
அவர்கள், விஷயம் வெளியே தெரிந்தால் மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர். தகவல் அறிந்த சைல்டு லைன் அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்துவிட்டு உடனே தஞ்சை எஸ்.பி. தர்மராஜிடம் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் மகளிர் பொலிஸ் நிலைய பொலிஸார், கோமதி மற்றும் பலாத்காரம் செய்த லெட்சுமணன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணத்திற்காக பெற்ற மகளையே காமுகன் ஒருவனுக்கு இரையாக்கிய பெண்ணை நினைத்து தஞ்சாவூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
0 comments :
Post a Comment