தன் மகனைக்கொலை செய்தவரை மன்னித்த சவூதி தந்தைக்கு 3.3மில்லியன் ரியால்

பழங்குடி கோத்திர தலைவர்களின் மத்தியஸ்தத்தின் அடிப்படையில் தனது மகனை கொலை செய்த நபரை மன்னித்து விட்ட சவூதி அரபியாவை சேர்ந்த தந்தைக்கு பழங்குடி கோத்திரத்தினர் சவூதி ரியால் 3.3 மில்லியனுக்கு மேற்பட்ட பரிசை அன்பளிப்பு செய்துள்ளனர்.

முஹ்சீன் பின் ஹதீத் அல் முகாதி எனும் நபர் சவூதி அரபியாவின் மேல் மாகாணத்தின் தாயிப் எனும் நகரத்தில் உள்ள நீதி மன்றத்திற்கு சென்று, தனது மகனை கொலை செய்த நபரை தான் ஒரு நயா பைசாவும் வாங்காமல் மன்னித்து விடுவதாக கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து கொலையாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீதிபதி இரத்துச் செய்தார்.

ஒரு வருடத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட மத்தியஸ்த முயற்சிகளை தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சண்டையின் போது தனது மகனை கொலை செய்த நபரை மன்னிக்க கொல்லப்பட்டவரின் தந்தை சம்மதித்துள்ளார்.

முஹ்சீன் பின் ஹதீத் அல் முகாதி

தியா என அழைக்கப்படும் கொலை செய்தமைக்காக கோரப்படும் பணத்தை இந்த மன்னிப்பிற்காக அவர் கேட்கவில்லை.

கொலையாளியை மன்னித்த இவரது பெருந்தன்மையினைப் பாராட்டி பழங்குடி கோத்திரத்தினர் மிகவும் விமர்சையான விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விருந்துபசாரத்தில் பழங்குடி கோத்திர தலைவர் இவருக்கு சவூதி ரியால் 3.3 மில்லியனுக்கு மேற்பட்ட அன்பளிப்புகளை வழங்கியதுடன் ஜீப் வகையான வாகனத்தையும் (Jeep 2013) வழங்கியுள்ளனர் என சவூதி அரபியாவின் சப்க் பத்திரிக்கை செய்தி வெளியிடுள்ளது.

இஸ்லாமிய சட்டத்தின் கீழ், கொலை குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி, கொலை செய்யப்பட்டவரின் உறவினர் தியா (இரத்தப் பணம்) அடிப்படையிலோ அல்லது பணம் ஏதும் இல்லாமல் மன்னிப்பதன் மூலம் தண்டனையில் இருந்து விலக்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :