விஜேதாஸவுக்கு 50 கோடி ரூபா இழப்பீடு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு உத்தரவு

சிலுமின பத்திரிகையில் பிரசுரமான செய்தியொன்றினால் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஸவுக்கு அபகீர்த்தி ஏற்பட்டமைக்கு 50 கோடி ரூபா இழப்பீடு செலுத்துமாறு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு வழங்கிய உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று மீண்டும் உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உத்தரவை இடைநிறுத்துமாறு லேக்ஹவுஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த வழக்கு முன்னர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது லேக்ஹவுஸ் நிறுவனம் சார்பாக எந்தவொரு அதிகாரியும் நீதிமன்றில் பிரசன்னமாகாத நிலையில் நீதவான் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கியிருந்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணை இடம்பெற்ற தினத்தில் தமது அதிகாரிகளால் நீதிமன்றில் பிரசன்னமாக முடியாமல் போனதால் தீர்ப்பினை மீள்பரிசீலனை செய்யுமாறு லேக்ஹவுஸ் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.

ஆயினும் அந்த மனுவை நிராகரித்த நீதிபதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை நேற்று மீண்டும் உறுதிசெய்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஆவதற்கான கனவுடன் விஜேதாஸ ராஜபக்ஸ வாழ்வதாக சிலுமின பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த கட்டுரையொன்றில் தமக்கு அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து 50 கோடி ரூபா இழப்பீடு கோரி ஜனாதிபதி சடட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஸ இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :