விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற ரமித் ரம்புக்வெலவிற்கு 50% அபராதம்

டகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல மதுபோதையில் விமானத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.

ரமித் ரம்புக்வெலவின் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில்50 சதவீத பணத்தொகையே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன்,கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே மது போதையில் இருந்த ரமித் ரம்புக்வெல விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார்.

இவர், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமையினால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :