92 வயது தாத்தா நேற்று 22 வயது அழகியை திருமணம் செய்து கொண்டார்-படம்

ராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்தவர் முசாலி முகம்மது அல்-முஜ்மாயி.

தற்போது 92 வயதை கடந்த இவர், பூர்வீகமாக விவசாய தொழில் செய்து வந்தார். இவருக்கு 16 குழந்தைகள் பிறந்தன. 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி 58வது வயதில் காலமானார்.

´பொண்டாட்டி செத்தா... புது மாப்பிள்ளை´ என்ற பழமொழிக்கு நான் ஒன்றும் விதிவிலக்கல்ல என்பதை இந்த 92 வது முதியவர் நேற்று நிரூபித்துள்ளார்.

தன்னை விட 70 வயது குறைவான 22 வயது இளம்பெண்ணை நேற்று மாலை திருமணம் செய்து உள்ளூர் இளைஞர்களின் கவனத்தை இவர் ஈர்த்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவருடன் இவரது பேரன்கள் இருவருக்கும் நேற்று ஒரே மேடையில் திருமணம் நடந்தது என்பதுதான்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த திருமண விழாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல் என்ற அனைத்து கேளிக்கை அம்சங்களுடனும் ஆடம்பரமாக அரங்கேறியது.

´எனது பேரன்களுடன் ஒரே மேடையில் திருமணம் செய்துக்கொண்ட அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது.

20 வயதே ஆன இளைஞனாக என்னை உணர்கிறேன்´ என்று நமட்டு சிரிப்புடம் கூறுகிறார், புது மாப்பிள்ளை முசாலி முகம்மது அல்-முஜ்மாயி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :