பணத்துக்கு ஆசைப்பட்டு தப்பு செய்து விட்டேன் – கைதான நடிகை கதறல்!

கேரளாவில் வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சூரிய ஒளி மின் சாதனங்கள் அமைத்து தருவ தாக கூறி பல கோடி மோசடி செய்ததாக பிஜு ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சரிதா நாயருக்கு முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் உதவியாளர் டென்னி ஜோப்பன் உதவி செய்ததாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் சரிதா நாயரும் டென்னி ஜோப்பனும் செல்போனில் எப்போதெல்லாம் பேசிக் கொண்டனர் என்ற தகவலையும் வெளியிட்டனர்.

இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி உம்மன் சாண்டி, இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த உத்தர விட்டதோடு உதவியாளர் டென்னி ஜோப்பனையும் பணி நீக்கம் செய்தார்.
மேலும் சோலார் பேனல் மோசடி குறித்து ஏ.டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் தலைமையில், விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

அவர் சோலார் பேனல் மோசடியில் ஏமாந்தவர்கள் யாராக இருந்தாலும் ஏ.டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து செங்கனூரைச் சேர்ந்த ராபிக் அலி என்பவர் ஏ.டி.ஜி.பி.யிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், பிஜு ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை அமைத்து தருவதாகவும், அதற்கு மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற்றுத் தருவதாகவும் கூறி ரூ.75 லட்சம் கேட்டார்.
இதற்காக முதலில் நான் ரூ.50 லட்சம் பணம் கொடுத்தேன். அதனை பிஜு ராதாகிருஷ்ணன், நடிகை ஷாலுமேனன் வீட்டில் வைத்து பெற்றுக் கொண்டார்.

அப்போது ஷாலுமேனன் சங்கனாச் சேரியில் புதியதாக வீடு கட்டி கொண்டிருந்தார். நான் கொடுத்த பணத்தில் ஷாலுமேனனுக்கு பிஜு ராதாகிருஷ்ணன் ரூ.30 லட்சம் கொடுத்தார். ஷாலுமேனன் வீடு கட்டி முடியும் தருவாயில் அவருக்கு மேலும் ரூ.10 லட்சம் தேவைப்பட்டது.
அந்த பணத்தை அவருக்கு கொடுக்கும்படி பிஜு ராதாகிருஷ்ணன் எனது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.

அதன்படி நான் நடிகை ஷாலுமேனனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்தேன். பணத்தை வாங்கிய பின்பு அவர்கள் கூறியபடி காற்றாலை அமைத்து தர வில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
என்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். அவர்களிடமிருந்து பணத்தை மீட்டுத் தருவதோடு இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் ஷாலுமேனன் மீது கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று மதியம் போலீசார் சங்கனாச்சேரியில் உள்ள ஷாலுமேனன் வீட்டுக்கு சென்றனர். அவரிடம் சோலார் பேனல் மோசடி பற்றியும், பிஜு ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோருடனான தொடர்பு பற்றியும் கேட்டனர்.

பின்னர் அவரை ஏ.டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தனர். அதற்கு ஷாலு மேனன் அவரது காரிலேயே வருவதாக கூறினார். அதை ஏற்றுக்கொண்ட போலீசார் ஷாலு மேனனுடன் 2 பெண் போலீசாரையும் அனுப்பி ஏ.டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவர் மீது புகார் கொடுத்த ராபிக் அலி இருந்தார். அவர், ஷாலு மேனனை அடையாளம் காட்டினார்.

இதையடுத்து காற்றாலை மோசடி வழக்கில் ராபிக் அலி கொடுத்த புகாரில் ஷாலுமேனனை 2-வது குற்றவாளியாக சேர்த்து போலீசார் கைது செய்தனர்.
அப்போது ஷாலுமேனன் கதறி அழுதார்.

அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

பணத்துக்கு ஆசைப்பட்டு தவறு செய்து விட்டேன். அதன் பலனை இன்று அனுபவிக்கிறேன். பிஜு ராதாகிருஷ்ணன் நல்லவர் என்று நம்பினேன். எனவே தான் அவரோடு பழகினேன். எனது செல்போன், வாகனத்தை பயன்படுத்த கொடுத்தேன். இப்போது மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் போலீசார் இவை எதையும் பொருட்படுத்தவில்லை. கைதான சில மணி நேரத்தில் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இன்று அவர் திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.tcnn
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :