இங்கிலாந்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவதை தடை செய்ய, அந்நாட்டின் சமுதாய மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளமுதல்கட்டமாக, வடக்கு லண்டனில் உள்ள என்பீல்ட் கவுன்சில், பொது இடங்களில் எச்சில் துப்புவதை தடை செய்யும் உத்தரவுஅமலுக்குவரவுள்ளது.
இதேபோல் நாடு முழுவதும், இதற்குரிய சட்டத்தை கொண்டு வர அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
எச்சில் துப்புவோர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்டம் அமலாவதற்கு ஒரு மாதம் ஆகும் என்று தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து புதிய சட்டம் இங்கிலாந்து முழுவதும் அமலாகும்.
ஏற்கனவே, டன்காஸ்டர் கவுன்சிலுக்கும் இதுபோன்ற முதன்மை ஒப்புதலை உள்ளாட்சித்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. அங்கு எச்சில் துப்புவோருக்கு அபராதம் விதிக்க இந்த கவுன்சில் தீர்மானித்துள்ளது.
0 comments :
Post a Comment