சமூகப் பொறுப்புக் கூறல் செயலமர்வும் களஆய்வும்

-நௌசாத்-

அம்பாறைமற்றும் மட்டக்களப்புமாவட்டங்களில்; பணியாற்றுகின்றடயகோணியா சர்வதேச நிதி நிறுவனத்தின் பங்காளர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தொடர் மற்றும் இணைந்தசெயற்பாடாக முன்னெடுத்துச் செல்லும் சமூகப் பொறுப்புக் கூறல் நிகழ்வின்; மூன்றாம் கட்டசெயலமர்வு 16.07.2013ம் திகதி அட்டாளைச்சேனைலொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட தீவுக்காளை , கோளாவில் -02,நாவற்காடு ,அளிக்கம்பை,சின்னப்பனங்காடு,அக்கரைப்பற்று 7ஃ4,அக்கரைப்பற்று 08,மற்றும் அக்கரைப்பற்று 8ஃ1 ஆகிய08 கிராமசேவைகர் பிரிவில் களஆய்வும் 17.07.2013 ஆந் திகதியன்றும் இடம்பெற்றது.

இணையத்தின் அங்கத்துவநிறுவனமான அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும், களஆய்வுக்காக அம்பாறைமாவட்ட இணையம் ஒருங்கிணைப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.இதன் போதுவளவாளர் திரு. ஏ.சொர்ணலிங்கம் அவர்கள் இலகுபடுத்துனராக கடமையாற்றியதுடன் டயகோணியாநிறுவனத்தின் பிரதிநிதியான திருஎம்.முருகவேள் அவர்களும் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இணையம்,அவா,சுவாட்,சொண்ட்,அல்குறைஷ், சூரியா, விழுதுகரிட்டாஸ் எஹெட் மற்றும் சீடீஎப் ஆகியநிறுவனங்களின் பிரதிநிதிகள் 25 பேர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போதுவளவாளர் திரு: ஏ.சொர்ணலிங்கம் அவர்கள் இலகுபடுத்துவதையும்,பயிற்சியில் கலந்துகொண்டோரையும் படத்தில் காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :