ஆறு மாதங்களேயான சிசுவின் உயிரை பறித்த 'லஞ்ஷீட்'

சாப்பாடு பொதிசெய்யும் 'லஞ்ஷீட்' ஆறு மாதங்களேயான சிசுவின் உயிரை பறித்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மாத்தறை, கந்தேகெதர பகுதியைச்சேர்ந்த ஆறுமாத சிசுவே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆறுமாத சிசுவிற்கு பால்லூட்டியதன் பின்னர் கட்டிலில் தூங்கவைத்த தாய், மின்விசிறியை சுழலவிட்டுவிட்டு சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், பகல்வேளையில் வீட்டுக்கு வந்த கணவன் அறையின் யன்னலை திறந்ததன் பின்னர் சிசுவின் முகத்திலிருந்த 'லஞ்ஷீட்டை எடுத்துவிட்டு சிசுவை எழுப்பியுள்ளார்.

சிசு அசைவற்று கிடந்ததையடுத்து கூச்சலிட்ட அவர் மனைவியின் உதவியுடன் சிசுவை தூக்கிக்கொண்டி வைத்தியசாலைக்கு ஓடியபோதிலும் சிசுவை காப்பாற்ற முடியவில்லை.

சிசு தூங்கிக்கொண்டிருந்த அறையிலுள்ள அலுமாரியின் மேல் வைக்கப்பட்டிருந்த லஞ்ஷீட்டே மின்விசிறியின் காற்றுக்கு பறந்துவந்து சிசுவின் முகத்தை மூடியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகலிருந்து தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :