தர்மபுரி இளவரசனின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும் என, இளவரசனின் பெற்றோரும், வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளவரசன் எழுதிய தற்கொலை குறிப்பு கடிதம் என, சொல்லப்படுகிற ஒன்றை, யாரோ ஒருவர், தன்னிடம் ஒப்படைத்ததாகவும், அதிலுள்ள வாசகங்களின் அடிப்படையில் இளவரசனுடைய மரணம், தற்கொலை என முடிவு செய்ததாகவும் ஆகவே அது தற்கொலையே என கடந்த 7ம் திகதி, தர்மபுரி எஸ்.பி., ஆஸ்ராக் கர்க் கூறினார்.
தடயவியல் ஆய்வு, மற்ற ரசாயன ஆய்வு எதையும் செய்யாமல் அக்கடிதம் இளவரசனால் எழுதப்பட்டது என்பதை நிரூபிக்காமல் எஸ்.பி., அறிவித்தது விசாரணையின் மீது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அக்கடிதம், யாரால், எப்போது ஒப்படைக்கப்பட்டது என்பது குறித்து, எந்த தகவலும் இல்லை. அந்த கடிதத்தை ஒப்படைத்த நபருடைய பின்புலம் அவருடைய நடத்தை ஆகியவை குறித்து பொலிஸார் விசாரித்ததா இல்லையா என்பது என்பது பற்றி, எந்த தகவலும் இல்லை.
கடிதம், ஜூலை முதல் திகதிக்கு முன் எழுதப்பட்டதாக தெரிகிறது. முதல் பத்தியில் "முதல் திகதியில் வரவில்லை என்றால், நான் உலகத்தை விட்டு பிரிந்து விடுவேன்´ என்பதாக சொல்லப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த பத்திகளில், திவ்யா வரவில்லை என்று, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விட்டது போன்ற வாசகங்கள் உள்ளன.
மேலும், கொலை செய்த நபர்களே, வழக்கை வேறு திசை திருப்புவதற்காக, கொலை செய்த பிறகு, கடிதத்தை வைத்து சென்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இளவரசனின் மரணத்தில், இது போன்ற, பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 comments :
Post a Comment