(ஏ.எல்.ஜனூவர்)
மஹிந்த சிந்தனை மூலம் எமது நாட்டின் கல்வித்துறையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. பாடசாலை காலங்களிலே அனுபவங்களை பெற்று பல துறைகளிலும் தொழில்களை கற்று முன்னேற்றம் அடையும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் பாடசாலை தொழில்நுட்ப கல்விப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமது மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
இச் சந்தர்ப்பத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் தொழில்நுட்பக் கல்விப் பிரிவு ஆரம்பித்து வைக்கும் வைபவம் பாடசாலையின் அதிபர் மௌலவி வீ.ரி.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், நமது நாட்டில் தற்போது க.பொ.த(சாஃத) க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தி அடைந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்திற்கு அதிகமான மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
பட்டம் பெறுவதற்கு முன்னரும் பட்டம் பெற்ற பின்னரும் அவர்கள் தொழில் வாய்ப்பினைப் பெறுவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். க.பொ.த(சாஃத) க.பொ.த (உ/த) பரீட்சைகளில் ஒன்று அல்லது இரண்டு புள்ளிகளினால் தெரிவு செய்யப்படாத மாணவர்களின் நிலமையும் கவலைக்குரிய விடயமாகும். இவர்களுடைய தொகையும் பெறுகிக் கொண்டே போகின்றது.
பட்டம் பெற்றவர்கள் ஒரு புறம் பட்டம் பெறாதவர்கள் மறுபுறம் எந்தத்தொழிலும் இல்லாத துர்பாக்கிய நிலையை நாம் கடந்த காலங்களில் கண்டோம். அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பிர்களிடம் தொழில்வாய்ப்புக்கேட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பம் செய்கின்ற போதிலும் பல ஆண்டு காலமாக அமைச்சர்களினாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் க.பொ.த(சா/த) க.பொ.த (உ/த) சித்தி அடைந்த நமது இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
தற்போதைய கால கட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும், தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கும் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வது இலகுவாக உள்ளது. நவீன உலகத்திற்கு ஏற்றவாறு நமது மாணவர்களை தயார்படுத்த வேண்டிய பெறும் பொறுப்பு எமக்கு உண்டு.
எமது நாட்டின் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் மஹிந்த சிந்தனை ஊடாக இலங்கையில் 200 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு தொழில் நுட்பக் கல்வித்துறையை ஆரம்;பித்ததன் மூலம் நமது மாணவ, மாணவிகள் தொழில்நுட்பம் சார்ந்த பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற வாய்ப்பு ஏற்பட்டிருப்பதுடன் சிறந்த பயிற்சிகளையும் எதிர்காலத்தில் நவீன உலகத்திற்கேற்ப தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலைமையும் உருவாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் இல்லாமல் எதனையும் செய்ய முடியாது இது காலத்தின் தேவை. எதிர்காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஆங்கில மொழி தேவைப்படும். அல்லது தொழில்நுட்ப முறையில் சைகை காண்பிக்கப்படுகின்ற போது வீடுகளுக்கு பொருட்கள் வந்து சேரும் நிலைமையும் ஏற்படும்.
அமைச்சுக்களின் அனேகமான கூட்டங்கள் அமைச்சர்கள் நேரடியாக இல்லாமல் அதிகாரிகளுடன் தொழில்நுட்பம் ஊடாக உரையாடி கடமைகளை அமுல்படுத்துகின்ற நவீன காலம் இது. இவைகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்.
இது போலவே நவீன உலகத்திற்கு ஏற்றவாறு தொழில் நுட்பக்கல்வி மூலம் நல்ல பயிற்சிகளை பெற்று நற்பிரஜைகளாக வாழவேண்டும் அது மட்டுமல்லாமல் தொழில் நுட்பக் கல்வி அனுபவமோ அல்லத பட்டம் பதவிகளையோ பெற்றாலும் நாம் பிறந்த மண், கற்ற பாடசாலை, நமது மார்க்ககலாசார விழுமியங்களில் இருந்து விலகி விடக்கூடாது நமது நாட்டிற்காகவும் மாகாணத்திற்காகவும் சமூக விடயங்களுக்காகவும் உங்கள் எதிர்காலத்தை பயன்படுத்த வேண்டும். உங்களைப் போல் இந்த பாடசாலையில் மாணவர்களாக இருந்தவர்கள் உயர்பதவிகளில் இருக்கின்றார்கள். இதே போன்றுதான் மாணவர்களாகிய நீங்களும் ஆளுமை மிக்க தலைவர்களாகவும் இப்பிராந்தியத்தின் சிறந்தவர்களாகவும் வரவேண்டும். இறை சிந்தனையுடன் எதிர்காலத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
பட்டம் பதவிகள் வழங்குவது இறைவன் தான். இறைவன் நினைத்தால் பட்டம் பதவிகளை தருவான். இறைவன் நினைத்தால் பட்டம் பதவிகளை பறித்துக்கொள்வான். கிழக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலம் இவ்வருடம் ஐந்தாம் மாதந்தான் முடிவடைய இருந்தது. ஆனால் ஜனாதிபதியின் தீர்மானத்தின் படி ஒரு வருடம் முன்கூட்டியே கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்பட்டது. 37 அங்கத்தவர்களில் அதிகமானவர்கள் வெற்றியடையவில்லை.
புதிய முகங்களே கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டனர். இதுவும் இறைவனின் ஏற்பாடாகும்.
நமது கலாசார விழுமியங்களில் கவனமாக இருக்க வேண்டும் சிறந்த பெயர்களை எடுக்க வேண்டும். சாதனை படைக்க வேண்டும். அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி சிறந்த சாதனைகளை படைத்து வந்துள்ளது. அமைச்சர்கள், சிறந்த அரசியல்வாதிகள், வைத்தியர்கள் பொறியியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பல உயர் பதவிகளை பெறுவதற்கு இப்பாடசாலை துணை புரிந்துள்ளது. நானும் இப்பாடசாலையின் பழைய மாணவன் என்ற வகையில் பெருமிதம் அடைகின்றேன்.
நமது கலாசார விழுமியங்களில் கவனமாக இருக்க வேண்டும் சிறந்த பெயர்களை எடுக்க வேண்டும். சாதனை படைக்க வேண்டும். அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி சிறந்த சாதனைகளை படைத்து வந்துள்ளது. அமைச்சர்கள், சிறந்த அரசியல்வாதிகள், வைத்தியர்கள் பொறியியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பல உயர் பதவிகளை பெறுவதற்கு இப்பாடசாலை துணை புரிந்துள்ளது. நானும் இப்பாடசாலையின் பழைய மாணவன் என்ற வகையில் பெருமிதம் அடைகின்றேன்.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அபிவிருத்தியில் நானும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் இணைந்து செய்த அபிவிருத்தி அடையாளங்கள் இக்கல்லூரியில் உள்ளது இக்கல்லூரியின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் எப்போதும் பக்க பலமாக நாங்கள் இருந்திருக்கின்றோம். இக் கல்லூரியை ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண பதில் முதல் அமைச்சராக நான் பதவி வகித்த காலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் இப்பாடசாலையை ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்க பெரும் பங்களித்தார்.
தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு பின் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் அரசியல் தலைமையினாலும் அவரால் எனக்கு வழங்கப்பட்ட அமைச்சு பதவி ஊடாகவும் இப்பிரதேசத்தின் கல்வி, காலாச்சாரம், பொருளாதார வளர்ச்சியில் பெரும் அபிவிருத்தி செய்து வருவதுடன் முழு மாகாணத்திற்கும் மூவின மக்களுக்கும் இனபாகுபாடு இன்றி அபிவிருத்தி பணிகளை செய்து வருகின்றோம்.
கல்வி அபிவிருத்தியை பொறுத்த வரையில் தேசிய காங்கிரஸ் ஒரு போதும் கட்சி வேறுபாடு பார்த்ததில்லை. ஒரு பாடசாலை அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் அப்பாடசாலை சமூகம் அரசியல் பாகுபாடு இன்றி பாடசாலை நன்மைகருதி பாடசாலை அபிவிருத்தி விடயத்தில் அரசியல் அதிகாரம் உள்ளவர்களை நாடி பாடசாலையின் தேவைகளை நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும்.
பாடசாலை அபிவிருத்தி பணிகளை வழங்குபவர்கள் யாராக இருந்தாலும் பாடசாலைச் சமூகம் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பவர்களாக இருக்க வேண்டும். இப்படசாலைக்காக கட்டிடங்களைக் கட்டுவதற்கு பல காலம் முயற்சி செய்து அதற்கான பணத்தினை ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்த வேளையில் திடீர் என்று வெளியில் இருந்து வந்தவர்கள் இக் கல்லூரியின் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நஸீர் அவர்கள் பிரதேசசபை தவிசாளராக பதவியேற்பு பாராட்டு விழா பகிரங்க கூட்டத்தின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கிம் அவர்கள் இனிமேல் அட்டாளைச்சேனை அபிவிருத்தி யுகத்தை நோக்கி பயணமாகும் என்றும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அபிவிருத்தி, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி, அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் அபிவிருத்தி முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் கூறிவிட்டு அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஆராதணை மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
வருடம் இரண்டாகியும் மண்டபத்தின் அடிக்கல் இன்னுமுள்ளது. தேசிய பாடசாலையின் ஆராதணை மண்டபம் இதுவரை கட்டப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
தேசிய காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களும் நானும் அரசியலுக்காக பொய் சொல்வதில்லை. இப்பாடசாலையின் முக்கியமான பணிகளை அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லாவுடன் இணைந்து நிறைவேற்ற இருந்த இவ்வேளையில் இப்பாடசாலைச் சமூகம் எங்களுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டமையினால் கிடைக்கவிருந்த பல நன்மைகளை இப்பாடசாலை இழந்துள்ளது.
கனவுகள் காண்பதென்றால் சிறிதாக காணக்கூடாது பெரிதாகவே காண வேண்டும் என மறைந்த பெருந் தலைவர் அஸ்ரப் அவர்கள் எமக்கு சொல்லித்தந்திருக்கின்றார்கள். நாங்கள் எப்போதும் மக்களுக்காக நல்லவைகள் பற்றியே கனவு காண்கின்றோம்.
எமது கனவுகளை முடியுமான வரை நிறைவேற்ற இறைவன் சந்தர்ப்பம் வழங்கியுள்ளான். இக்கல்லூரி நம் அனைவருக்கும் சொந்தமான கல்லூரி ஆகும். இக் கல்லூரியை எதிர்காலத்தில் நாம் அனைவரும் ஒன்றினைந்து வளர்த்தெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உண்டு.
கட்சி பேதங்களை மறந்து இக்கல்லூரி சமூகம் துய்மையான மனப்பாங்குடன் செயற்பட முன்வரும் பட்சத்தில் இக்கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கு நானும் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் இணைந்து செயற்படுவோம்.
அரசாங்கம் ஒவ்வொரு பிரதேசத்தின் அபிவிருத்தி பொறுப்புக்களையும் அந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரிடம் வழங்கியுள்ளது.
அரசாங்கம் ஒவ்வொரு பிரதேசத்தின் அபிவிருத்தி பொறுப்புக்களையும் அந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரிடம் வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் அட்டாளைச்சேனை, இறக்காமம், அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் ஒருங்கிணைப்பு குழுத்தலைவராக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் செயற்பட்டு வருகின்றார்.
இவர் எமது பிரதேச அபிவிருத்திக்கு என்றுமே பக்கபலமாக இருப்பது மாத்திரமல்லாமல் இப்பாடசாலையின் வளர்ச்சியிலும் அக்கறையாக உள்ளார்.
தேசிய காங்கிரஸின் தலைமைக்கும் எனக்கும் அரசியல் அதிகாரம் கிடைத்த சந்தர்பங்களில் எல்லாம் நமது பிராந்திய கல்வி வளர்ச்சிற்கு பெரும் பங்காற்றியுள்ளோம். இவ்வாறு பாடசாலைகளுக்கு பல அபிவிருத்தி பணிகளை செய்கின்ற போதிலும் இப் பாடசாலை சமூகத்திடமிருந்து எமது பிரதேச அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களை நடாத்துவதற்கு மண்டபத்தை தருமாறு கோருவோம். இதை விட பாடசாலை சமூகத்திடமிருந்து வேறெதையும் நாங்கள் எதிர்ப்பார்பதில்லை.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம்,பிரதி கல்விப் பணிப்பாளர், ஏ.எம்.றஹ்மத்துல்லா, அமைச்சரின் இணைப்பாளரும் முன்னாள் அதிபருமான ஏ.சி.சைபுத்தீன், முன்னாள் கல்முனை வலயப் பணிப்பாளர் மரூதூர் ஏ. மஜீட், அம்பாறை மாவட்ட சாரணிய முன்னாள் ஆணையாளர் முஸ்தபா உட்பட உயரதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment