பிரதமர் டி.எம். ஜயரட்ன பௌத்த மதத்திற்கு சேவையாற்றவில்லை என ரங்கிரி தம்புள்ள விகாரையின் விகாராதிபதியான இனாமலுவே ஸ்ரீ சுமங்கல தேரர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேடைகளில் ஏறி பௌத்த மதம் பற்றி பிரசாரம் செய்வதில் பயனில்லை. இவ்வாறு மேடைகளில் கூச்சலிடுவதனால் பௌத்த மதத்திற்கு நன்மைகள் ஏற்படப் போவதில்லை.
பொதுவான பௌத்த கொள்கையொன்றை உருவாக்குதவற்காக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மாநாயக்கர்கள் முன்வைத்த யோசனைத் திட்டம் இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை.
சுழலும் நாற்காலிகளில் அமர்ந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கு பௌத்த பிக்குகள் பற்றி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கிடையாது. அரசியல்வாதிகள் தங்களது வேலைகளை உரிய முறையில் செய்தால் போதுமானது என இனாமலுவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் பௌத்த பிக்குகளின் காவி உடைகளை களைய வேண்டுமென அண்மையில் பிரதமர் விடுத்த பகிரங்க அறிவிப்பிற்கு பதிலளிக்கும் வகையில் இனாமலுவே சுமங்கல தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment