மூன்று சிறுமிகளை நடுத் தெருவில் விட்டுச் சென்ற பொறுப்பற்ற பெற்றோர்

பொகவந்தலாவை, மோரா தோட்ட கீழ் பிரிவில் உள்ள வீடொன்றிலிருந்து அநாதரவாக விடப்பட்ட நிலையில் மூன்று சிறுமிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். 

9, 7 மற்றும் 5 வயதுகளைக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் தந்தை கொழும்பில் வேலை செய்து வருபவர் எனவும் அவர் கடந்த ஆறு மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாயார் சிறுமிகளை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

சிறுமிகள் மூவரும் நேற்று (19) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சிறுமிகளை மஸ்கெலியா சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :