ஹெம்மாதகம வாடியதென்ன கிராமத்தை சேர்ந்த மொஹமட் ஹம்ஷா, பௌமி மற்றும் அவர்களின் ஹட்டன் பகுதியை சேர்ந்த தமிழ் வாகன சாரதி ஆகியோர் பலத்கமுவ கிராமத்தில் வைத்து சிங்கள பெளத்த குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டு மாவனல்லை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஹெம்மாதகம பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் அதாவுட செனிவரட்டனவின் இணைப்பாளர் மொஹமட் றியாசிடம் வினவியபோது அவர் தெரிவித்த தகவல்கள் இங்கு தருகிறோம்
நேற்று மாலை ஹெம்மாதகம- கம்பளை பிரதான வீதியில் பலத்கமுவ என்ற கிராமத்தின் வீதியில் மாடு ஒன்றின் தோல் போடப்பட்டதாக தெரிவித்து பெரும் திரளானவர்கள் அந்த மாட்டு தோலை நடு வீதியில் போட்டு அந்த வீதியால் செல்லும் முஸ்லிம்களை இடைமறித்து மிக மோசமான முறையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கடுமையாக தூஷித்து கொண்டு இருந்துள்ளனர் .

அவர்கள் மத்தியில் பெளத்த தேரர்களும் இருந்துள்ளனர் . இது சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது .
அந்த வழியாக நானும் இரவு 8:30 மணியளவில் சென்றேன் என்னிடமும் அவர்கள் கூச்சல் போட்டார்கள். ஆனால் மாலை வேலையில் அந்த வழியாக வந்த முஸ்லிம்களை மிக மோசமாக தூஷித்துள்ளனர்.
அந்த நேரத்தில் அவ்வழியாக முச்சக்கர வண்டியில் வந்த புர்கா அணிந்த பெண்ணும் அவரின் கணவரும் இடைமரிக்கப் பட்டு அவர்களை மிகவும் மோசமான தூஷித்துள்ளனர். இரவு பலத்கமுவ விகாரையில் இருந்து மாடுகளை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்பாட்டம் ஊர்வலம் ஒன்றும் சென்றுள்ளது.
அந்த வழியாக சட்டரீதியான ஆவணங்களுடன் மாடு ஒன்றை வளர்க்கும் நோக்குடன் ஹெம்மாதக நோக்கி வந்த வாகனம் குறித்த பலத்கமுவ பகுதில் இடைமரிக்கப் பட்டு அந்த வாகனத்தில் இருந்த முஹம்மத் ஹம்ஸா , பௌமி மற்றும் அவர்களின் ஹட்டனை சேர்ந்த தமிழ் வாகன சாரதி ஆகியோர் கடுமையான முறையில் தாக்கப்பட்டு அவர்கள் ஹெம்மாதகம போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு ஹம்ஸா வாக்குமூலம் வழங்க முடியாத நிலையில் வாந்தியெடுத்துள்ளார் . விசாரணை மற்றும் வாக்குமூலத்தின் பின்னர் இரவு 11:30 மணியளவில் அவர்கள் ஹெம்மாதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறு பேர் கைது
இரவு போலிஸ் நிலையத்தில் பொருப்பதிகாரி இது தொடர்பில் பக்கசார்பற்ற முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் அஸ்லம் பேசும்போது அவரிடம் தெரிவித்தார். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இரவு வழங்கிய வாக்கு மூலத்தின் படி இன்று காலை ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கபட்டுள்ளனர் .
இந்த சப்வம் இனக்கலவரம் ஒன்றை தூண்டும் நோக்கில் திட்டமிடப்பட்டு மாட்டுத் தோல் அங்கு போடப்பட்டதா ? என்ற சந்தேகம் நிலவுகிறது. இரவு குறித்த மாட்டுத் தோலை பெற்று அதை புதைத்து விடும் நோக்குடன் அங்கு முஸ்லிம்கள் சிலர் சென்றனர் எனினும் அவர்கள் மாட்டுத் தோலை வழங்க மறுத்து விட்டனர் .
ஹெம்மாதகமயில் மூன்று இறைச்சி கடைகள் இருக்கிறது அவர்களிடம் இது தொடர்பில் விசாரித்தோம் அவர்கள் எவரும் இதை அங்கு போடவில்லை என்று தெரிவித்தனர் மாடுகளை அருக்கும் மடுவம் ஹெம்மாதகமயில் இல்லை வெளியில் இருந்தே அங்கு இறைச்சி கொண்டுவரப் படுகிறது .
இவர்களா ஈடுபட்டார்கள் என்று அதிர்ச்சி தருகிறது
குறித்த கிராமத்து மக்களுடன் முஸ்லிம்கள் நெருக்கமாக பழகி வந்தார்கள் அவர்களை அனைவரையும் எமக்கும் தெரியும் அவர்களுக்கும் எம்மை நன்றாக தெரியும் இப்படி ஒரு சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டமை இவர்களா ஈடுபட்டார்கள் என்று அதிர்ச்சி தருகிறது .

நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் பெருந்தொகையாவர்கள் கலந்து கொண்டுள்ளனர் அவர்கள் சிறிய குழுவல்ல , அயல் கிராமத்தில் இருந்தும் வந்து இந்த சம்பவங்களில் கலந்து கொண்டுள்ளனர் .என்று றியாஸ் தெரிவித்தார்.
அமைச்சர் அதாவுட செனிவரட்டன
இது தொடர்ந்து கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது பலரும் என்னுடன் தொடர்பு கொண்டு இதனை தெரித்தனர் அமைச்சர் அதாவுட செனிவரட்டன வுடன் இது தொடர்பாக தெரிவித்தேன் கலவரம் வராது பார்த்துகொள்வோம் ஆனால் தாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என்று தெரிவித்தார் என்று அமைச்சர் அதாவுட செனிவரட்டனவின் இணைப்பாளர் மொஹமட் றியாஸ் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment