தொழுகையில் ஈடுபட்ட முஸ்லீம்களுக்கும் மரண ஊர்வலத்தில் பறை அடித்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று மாலை 3.45 மணியளவில் யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் முன்னால் அஸர் தொழுகை வேளை இடம்பெற்றுள்ளது.
சூரியவெளி எனும் பிரதேசத்தில் இருந்து ஊர்வலமாக பறை அடித்தலுடன் வந்த மரண ஊர்வலம் அராலி வீதி, கல்லூரி வீதியினூடாக நாவாந்துறை மயானத்தினை நோக்கி நகர்ந்து வந்துள்ளது.
இதனை அவதானித்த பள்ளிவாசல் சூழலில் நின்ற முஸ்லீம்கள் மேளதாளத்துடன் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டோரை நோக்கி பள்ளிவாசல் முன்னால் பறை அடிக்க வேண்டாம் எனவும், தொழுகை இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதனால் ஆத்தரமுற்ற மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் முஸ்லீம்களை அநாகரிக வார்த்தைகளால் திட்டியதுடன் கத்தி போன்ற கூரான ஆயுதத்தினால் தாக்க முற்பட்டதுடன், பள்ளிவாசல் சுவரை தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தினால் சேதப்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பள்ளிவாசல் அருகில் இராணுவ காவலரனில் நின்ற இராணுவத்தினரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
நோன்பு நோற்ற காரணத்தினால் முஸ்லீம்கள் பொறுமையுடன் இவ்விடயத்தில் நடந்துள்ளனர்.
இதே வேளை சம்பவ இடத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒலி எழுப்ப தடை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட விளம்பர பலகையும் பொருத்தப்பட்டிருந்தன. பொதுவாக சமய தலங்களுக்கு முன்னால் ஒலி எழுப்புவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் மேற்படி சம்பவமானது இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவமானது இணக்கப்பாடற்ற தன்மையை மக்களிடையே தோற்றுவித்துள்ளதாக சமூக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்
மேலும் இவ்வாறான ஒரு சம்பவம் போன்று கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இதே பள்ளிவாசல் முன்னால் மஃரிப் தொழுகையின் போது கிறிஸ்தவ சமயச்சடங்கினால் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment