உலகம் பூராகவும் வியாபித்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் தம் வசமுள்ள பலகோடி ரூபாய்களை செலவு செய்து இலங்கையில் பொதுநலவாய மாநாடு இடம்பெறுவதைத் தடுக்கவும் நாட்டுக்கு பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தவும் சதித்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டும் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், எமது நாட்டின் உண்மை நிலைமையை இம் மாநாட்டின் மூலம் உலகிற்கு எடுத்தியம்ப முடியும். எனவே, அனைவரும் ஒன்றுபட்டு இதனை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பில் மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண சபை செயலாளர்கள், அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையிலும் இம் மாநாடு தொடர்பில் பாடசாலை மாணவர்களிடையே தெளிவூட்டல் தொடர்பான திட்டங்களை முன்னெடுத்தல் குறித்தும் வியாழக்கிழமை வெளிநாட்டமைச்சில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்திலேயே இலங்கையில் மாபெரும் அணிசேரா நாடுகளின் மாநாடு இடம் பெற்றது.
அதன் பின்னர் பல தசாப்தங்களுக்கு பின்னர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இலங்கையில் 53 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இடம் பெறுகிறது.
இது எமது நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்த அதிகூடிய கெளரவமாகும். இதன் மூலம் இம் மாநாட்டின் தலைமைப் பதவி 2 வருடங்களுக்கு ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.
உலகம்
இந்த மாநாட்டின் மூலம் நாட்டுக்கு பாரிய பிரதி அனுகூலங்கள் கிடைக்கின்றன.
உலகம் எமது கருத்துக்கு செவிசாய்க்கும் நிலைமை உருவாகும். அத்தோடு பொருளாதார ரீதியான நன்மைகளும் கிடைக்கும்.
தீய சக்திகள்.
விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், உலகம் பூராகவும் வியாபித்துள்ள விடுதலைப் புலிகள் தம் வசம் சேர்த்து வைத்துள்ள பல கோடி ரூபாய்களை செலவழித்து இலங்கைக்கு எதிரான எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்திலான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
பெருளாதார ரீதியில் நெருக்கடிகளை ஏற்படுத்தவும் மறுபுறம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் எமது நாட்டுக்கு எதிரான சதித் திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறான சதித் திட்டங்களால் எமது நாட்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு இடம்பெறுவதைத் தடுக்க இவர்கள் முற்பட்டு இயலாமல் போனது. இப்படியான பல்வேறு தடைகளைத் தாண்டி மாநாடு நடைபெறுகிறது. இதனூடாக எமது நாட்டின் உண்மையான நிலைவரத்தை உலகுக்கு எடுத்தியம்ப சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
தேசிய ரீதியில்
இந்த மாநாடு தொடர்பில் பாடசாலைகள் மட்டத்தில், மாணவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்.
இம் மாநாட்டின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன உலகில் எமக்கு கிடைக்கும் அந்தஸ்து என்ன? என்பது தொடர்பில் எமது எதிர்கால சந்ததியினர் புரிந்துகொள்ள வேண்டும்.
இதனூடாக நாட்டு மக்களுக்கு தெளிவு பிறக்கும் உலகிற்கும் செய்திகள் போய்ச் சேரும். எனவேதான் கல்வி அமைச்சை இணைத்துக் கொண்டு மாணவர்களிடையே இம் மாநாடு தொடர்பில் விவாதங்களை கட்டுரைப் போட்டிகளை சித்திரப் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.
ஒற்றுமை
இம்மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்கு சதிகாரர்களின் சதித்திட்டங்களை தகர்த்தெறிவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன.
நாட்டில் 9732 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மாகாணசபை அதிகாரங்களின் கீழேயே உள்ளன.
40 இலட்சத்துக்கு மேலான மாணவர்கள் கல்வி கற்பதோடு 2,17,000 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். எனவே, இதனை பயன்படுத்தி எமது நாட்டில் நடைபெறும். பொது நலவாய நாடுகளின் மாநாடு தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலும் தெளிவூட்டல்களை ஏற்படுத்தலாம் விசேடமாக சித்திரப் போட்டிகளை நடத்துவது சிறந்ததாகும்.
அகில இலங்கை ரீதியில் கட்டுரை விவாதப் போட்டிகளையும் நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாநாடு இடம் பெறும்போது ஜனாதிபதி மூலம் பரிசில்களை வழங்க வேண்டும். இது தொடர்பில் மாணவர்களுக்கு ஆரம்ப கட்ட அறிவை வழங்க வேண்டும் என்றார்.

0 comments :
Post a Comment