மஹியங்கன பள்ளிவாயல் மூடப்பட்ட செய்தி பேரதிர்ச்சியாக இருப்பதுடன் அரசாங்கம் என்ற வகையில் முஸ்லிம் அமைச்சர்களும் அவர்களின் கட்சிகளும் இதற்கு பொறுப்புக்கூறுவதோடு உடனடியாக பள்ளிவாயலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
இந்த வருட நோன்பு மாதம் ஆரம்பமானவுடன் மஹியங்கன பள்ளிவாயல் தாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கையாலாகாத முஸ்லிம் அமைச்சர்கள் கண்டன அறிக்கை விடுவதுடன் நிறுத்திக்கொண்டனர்.
அதன் பின் ரஊப் ஹக்கீம், அதாவுள்ளா, பௌசி, ரிசாத் பதியுதீன் ஆகியோர் இது பற்றி ஜனாதிபதியுடன் பேசியதாக ஊடகங்களுக்கு தெரிவித்து சமூகத்தை சமாளித்தனர். அந்த வேளை இது பற்றி ஜனாதிபதியுடன் பேசி தீர்க்கமான முடிவுக்கு வராமல் எங்கே தமது பதவிகளுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் அதிகம் பேசுவதை அமைச்சர்கள் நிறுத்திக்கொண்டனர். அந்தத்தாக்குதலை அரசாங்கமும் கண்டிக்கவில்லை.
இந்த நிலையில் இப்போது மஹியங்கனை பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கவிடாமல் தடுத்ததோடு பள்ளிவாயலும் மூடப்பட்டுள்ளமை இந்நாட்டு முஸ்லிம்களின் மத உரிமை மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறலாகும். இத்தகைய தொடர் தாக்குதலுக்கு பிரதான காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய முஸ்லிம் கட்சிகளும் பணத்துக்கும், பதவிகளுக்கும், அபிவிருத்தி மாயைகளுக்கும் அரசிடம் சோரம் போனமையாகும்.
அது மட்டுமல்ல முஸ்லிம் மக்களும் இத்தகைய அநியாயங்களுக்கெதிராக ஜனநாயக ரீதியல் தமது எதிர்ப்பை காட்டுவதற்கு தேர்தல்களை பாவிக்காமல் இருப்பதும் மற்றுமொரு காரணமாகும். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது பள்ளிவாயல்கள் தாக்கப்படுவதை முஸ்லிம் சமூகம் எதிர்க்கிறது என்ற செய்தி சொல்ல வேண்டுமாயின் அரச கட்சிக்கோ அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கோ ஏனைய காங்கிரஸ்களுக்கோ வாக்குப்போடுவதை தவிர்க்க வேண்டும் என நாம் தெளிவாக கூறினோம். ஆனால் கிழக்கு முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளின் மாயாஜால வார்த்தைகளுக்கு மயங்கி ஏமாந்து போனதுடன் எத்தனை பள்ளிகள் உடைக்கப்பட்டாலும் முஸ்லிம்கள் தமக்கு அல்லது தமது தரகர் கட்சிகளுக்கே வாக்குப் போடுவார்கள் என்ற செய்தியை அரசுக்கு உறுதிப்படுத்தினார்கள்.
நாம் அடிக்கடி சொல்லி வருகின்ற ஒரு விடயம்தான் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஆயுதத்துக்கோ பணத்துக்கோ பயப்பட மாட்டார்கள் என்பதும் மாறாக தேர்தல் வாக்குகளுக்கே பயப்படுவார்கள் என்பதுமாகும். அத்தகைய வாக்கு எனும் ஆயுதத்தை; எவ்வாறு பாவிப்பது என்று முஸ்லிம் சமூகம இன்னமும் புரியாமல் இருப்பது கவலை தருகிறது.
எது எப்படியிருப்பினும் மஹியங்கனை பள்ளிவாயல் மூடப்பட்டதை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இதனை மீண்டும் திறக்க அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் முனைப்பு காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.

0 comments :
Post a Comment