காதல் தகராறால், கல்லூரி மாணவன் கொலை-வாலிபர் ஒருவர் கைது


காதல் தகராறால், கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் பழனியப்பனின் மகன் செல்லபாண்டியன், 22. இவர், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில், மூன்றாமாண்டு படித்தார்.

நேற்று முன்தினம் மர்மமான முறையில், ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் முகாம் அருகே உள்ள கிணற்றில், இறந்து கிடந்தார். மலையம்பாளையம் பொலிஸார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்தனர்.

பொலிஸ் விசாரணையில், ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் விஜயன் மகன் கஜேந்திரன், 23. முகாமில் உள்ள, இவரது முறைப்பெண்ணை, செல்லபாண்டியன் காதலித்து வந்தார்.

இதனால், ஏற்பட்ட பிரச்னையில் செல்லப்பாண்டியனை, கஜேந்திரன் கொலை செய்து, கிணற்றில் வீசியது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த கஜேந்திரனை, மலையம்பாளையம் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :