வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடிரியுமை வழங்குவது தொடர்பான புதிய சட்டம் வரையப்பட்டுப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சட்டவரைவுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வரையப்பட்டுள்ள புதிய சட்டம் பரிசீலனைக்காகச் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இது குறித்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இரட்டைக் குடியுரிமை பெற ஒரு தடவை விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
அந்த விண்ணப்பங்கள் ஏற்கனவே ஒப்புதலுக்காகச் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுப் பரிசீலிக்கப்பட்டுள்ளன. புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், திருத்தங்கள் இருந்தால், மீள் விண்ணப்பங்களைச் செய்ய முடியும் என்றார்.
0 comments :
Post a Comment