( நப்றிஸ் )
ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸ கிராம மட்ட மாணவர்கள் கணனி அறிவைப் பெற்று
உலகளாவிய கணனி தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை நெறிப்படுத்த
வேண்டும் என்ற நோக்கோடு கிராமங்கள் தோறும் மஹிந்த சிந்தனை
வேலைத்திட்டத்தின் கீழ் நெசனல அறிவகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைவாக சாய்ந்தமருது நெசனல அறிவகத்தில் கணனி கற்கை நெறிகளை
வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி
வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நேற்று (05)
நடைபெற்றது.
வொன்டர் எக்சன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், நெசனல
அறிவகத்தின் பொறுப்பாளருமான ஜெஸீல் எம்.ஜப்பார் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், கல்முனை மாநகர
முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு
மாணவர்களுக்கு சான்றிதழ்களினை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.நஸார்தீன், வொன்டர் எக்சன்
நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் முபீதா உஸ்மான் மற்றும் நெசனல
விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது 17 பயிற்சி நெறிகளில் கற்கைகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு
அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment