நாட்டில் சுமார் 17 பள்ளிவாசல்கள் மத வெறி பிடித்த காடையர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இவ்விடயம் வேதனையளிக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹசனலி எம்.பி. தெரிவித்தார்.
மஹியங்கதவ மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மட்டுமல்லாமல் புனித ரமழான் மாதத்தில் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையை நடத்தக் கூடாதென ஊவா மாகாண அமைச்சர் அனுரவிதாரன கமகே தடுத்து நிறுத்தியுள்ளார். இது மத சுதந்திரத்துக்கு சவால் விடும் செயலாகும்.
நாட்டில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவற்றை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததனால் இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினரான முஸ்லிம்கள் சன்மார்க்க கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மஹியங்கன பள்ளிவாசல் கடந்த 21வருடங்களாக முஸ்லிம்களின் தொழுகைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 150க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இங்கு தொழுகையை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment