தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலை தான் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு உறுதிபடுத்தியுள்ளது.
தருமபுரி இளவரசன் கடந்த 4ம் திகதி இரவு ரயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார்.
இளவரசன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து விட்டார்களா? என்பது குறித்து தமிழகம் முழுவதும் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் இளவரசனின் சடலத்தை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது தந்தை மனுத்தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர்கள் குழுவை கொண்டு பிரேதப்பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இளவரசனின் உடலை பிரிசோதனை செய்து, உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையின் நகல் தருமபுரி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் இளவரசன் ஓடும் ரயிலில் விழுந்து அடிபட்டு தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அவரை யாரும் ரயிலில் தள்ளிவிட்டோ அல்லது துன்புறுத்தியோ கொன்றதற்கான எந்தவித மூகாந்திரமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இளவரசனின் மரணம் தற்கொலை தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இளவரசன் மரணம் குறித்து விசாரித்து வரும் தனிப்படை பொலிசார் பிரேதப்பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் மனு செய்து வாங்க உள்ளனர்.
0 comments :
Post a Comment