முர்சியின் வீழ்ச்சி இஸ்லாத்தின் வீழ்ச்சியாகாது- ஜுனைட் நளீமி






கிப்தின் ஜனாதிபதி கலாநிதி முர்சி இராணிவத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டதினைத்தொடர்ந்து பல்வேரு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல், அமெரிக்க கூட்டு மேற்கின் சூழ்ச்சியில் சில முஸ்லிம் நாடுகளும் இப்பதவிக்கவிழ்ப்புக்கு காரணமாக சொல்லப்படுகின்றது.

 முர்சியின் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி இராணுவத்தினால் கவிழ்க்கப்பட்டதினைத்தொடர்ந்து இஸ்லாம் தோற்றுவிட்டதாக சிலரும், கிலாபத் நோக்கிய அரபு வசந்தம் தோற்றுப்போய் விட்டதாக சிலரும், இஹ்வான்கள் தோழ்வியடைந்துள்ளதாக சிலரும்,; மாறி மாறி கருத்துக்களை முன்வைக்கின்றனர். 

நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது உமர் (ரழி) அவர்கள் நம்ப மருத்ததும் அதற்கு பதிலழிக்குமுகமாக அபூபக்கர் (ரழி) அவர்கள் யார் முஹம்மதை அல்லாஹ் என ஈமான் கொண்டாரோ அந்த முஹம்மத் மரணித்து விட்டார். 

யார் அல்லாஹ்வை ஈமான் கொண்டார்களோ அவன் உயிரோடிருக்கின்றான் மரணிக்கவில்லை என குறிப்பிட்டது இஸ்லாம் என்றும் மரணிக்காது என்பதனையே குறிக்கின்றது. இஸ்லாம் தனிமனித முடிவிலோ அல்லது ஒரு சமூகத்தின் முடிவிலோ அல்லது ஒரு சாம்ராஜ்யத்தின் அஸ்த்தமனத்திலோ முடிந்து விடுவதில்லை. 

மாறாக சத்தியம் என்றும் நிலைத்தே இருக்கும் என்ற செய்தியை இஸ்லாம் குறிப்பிடுகின்றது. ஈஸா (அலை) வின்னுக்கு உயர்த்தப்பட்டதன்காரணமாகவோ அல்லது அஸ்ஹாபுல் கஹ்பு (குகை வாசிகள்) குகையினுல் ஒழிந்து கொண்டதன் காரணமாகவோ இஸ்லாம் உலகத்தை விட்டும் விடை பெறவில்லை பல நூற்றாண்டுகள் தாண்டியும் இஸ்லாம் மீன்டெழுந்த வரலாறே கானப்படுகின்றது. உமர் கொள்ளப்பட்டதனாலோ, உஸ்மான் கொலை செய்யப்பட்டதனாலோ, அலி கொலை செய்யப்பட்டதனாலோ இஸ்லாம் அழிந்து விடவுமில்லை உஸ்மான் கொல்லப்பட்டதை அல்லது அலி கொல்லப்பட்டதை சரிகண்டு கிளர்ச்சியாளர்களை சத்தியவான்கள்; என்ற வாதத்துக்குள் அடக்கிவிடவும் முடியாது.

இத்தகைய வரலாற்றுப்பிண்ணனியில்தான் முர்சியின் ஆட்சிக்கவிழ்ப்பை நோக்க வேண்டியுள்ளது.

எகிப்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பிண்ணடைவுகளுக்கு காரணங்கள் குறித்து இஸ்லாத்தின்தோழ்வியா அல்லது எகிப்திய மக்களின் தோழ்வியா அல்லது ஜனநாயகத்தின் தோழ்வியா என கருத்துக்களை தெரிவிப்பதற்கு முன் எகிப்தின் நிலை குறித்து முதலில் தெளிவு கானவேண்டும். எகிப்தானது தொடர்ந்தும். இராணுவ சர்வாதிகார ஆட்சிக்குற்பட்டே கடந்த காலங்களை கடந்து வந்துள்ளது. துருக்கியின் கிலாபத் வீழ்ச்சியையடுத்து எகிப்தில் கிலாபத் நோக்கிய பயனம் இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றத்துடன் ஆரம்பமானது.

 என்ற போதும் மேற்கின் நேரடி மறைமுக கரங்கள் இஸ்லாத்தை நசுக்குவதில் உன்னிப்பாக செயற்பட்டு வந்துள்ளது. சர்வாதிகார ஆட்சியாளர்களின் அடக்கு முறைக்கு பலக்கப்பட்டவர்களாக சாதாரன மக்கள் புரட்சியினால் எதுவும் சாதிக்கமுடியவில்லை என்ற மனநிலையில் அவர்கள் கிடைப்பவற்றை கொண்டு வாழ்க்கை நடாத்த பலகிக்கொன்டனர். சிந்தனை சக்தியை முடக்கி விடுவதற்காக எகிப்தின் கல்விப்பொருப்பு எப்போதும் மேற்கு மயப்படுத்தப்பட்டவர்களின் கைகளிலே கானப்பட்டது. 

உயர்கல்விக்கான வாய்ப்புகள் முதலாளி வர்க்கத்திற்கு மாத்திரம் என்ற நிலையானது. உள்நாட்டின் ஆரம்ப கல்வித்திட்டங்கள் கூட மாற்றத்தை நோக்கியதாக இருக்கவில்லை. 

உதாரணமாக முன்னால் ஜனாதிபதி முபாரகின் ஆட்சிக்காலப்பகுதியில் அவரது கிரிஸ்தவ மனைவியின் கையிலேயே கல்வி அமைச்சுப்பொருப்பு கானப்பட்டதனை குறிப்பிடலாம். 

லிபியா, சிரியா, ஈராக் போன்ற பல இராணுவ ஆட்சி நிலவிய நாடுகளில் சூபித்துவத்தை ஊக்குவித்து நவீன கால இஸ்லாமிய சிந்தணைப்பாரம்பரியங்களை வழங்கும் கல்வித்திட்டங்களும் இஸ்லாமியமைப்புக்களும் திட்டமிட்டு முடக்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சி நிரல் எகிப்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மக்களின் ஏழ்மை நிலையினை சரியாக கனக்கிட்டு அதனை புரட்சியின்பால் இட்டுச்செல்லாமல் அரசின் பக்கம் தக்க வைத்துக்கொள்வதற்கான நிகழ்ச்சி நிரல்களையும் மேற்கு எகிப்துக்கு வழங்கியது.

 இஸ்ரேல் மீதான ஒச்டோபர் 6 புரட்சியின் போது இஸ்ரேல் தொடைத்தெரியப்படும்; என்ற நிலை கண்ட போது யுத்தத்தை நிருத்துவதற்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதுடன் சில சலுகைகளும் எகிப்துக்கு வழங்குவதற்கு மேற்கு முன்வந்தது. 

இதன் ஓர் அமசமாக இலவச கோதுமை விநியோகத்தை அமெரிக்கா எகிப்துக்கு வழங்கியது. ரொட்டியையும் பூல் எனும் தானியத்தையும் அன்றாட உணவாக பயண்படுத்தும் எகிப்தியர்களுக்கு அரசின் இலவச விநியோகம் அரசை நோக்கிய மக்கள் புரட்சியை தடுப்பதாக அமைந்தது. 

கமால் அப்துல் நாசர் ஆட்சியின் போது மக்களை தம்பக்கம் வைத்துக்கொள்ள வீட்டுக்கொரு பசு வழங்கும் திட்டத்தினை முன்வைத்தார். 

அதன் விழைவு இன்று வரை அவரது கட்சிக்கு நன்றி கடன் செழுத்தும் புத்திஜீவிகள் என சொல்லப்படுபவர்களையும் கானமுடிகின்றது. எகிப்தின் பட்டதாரி ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. 

அவர் ஒரு முக்கிய இமாமாகவும் போதகராகவும் கானப்பட்டார். அவரிடம் நடக்கவிருக்கும் தேர்தலில் யாருக்கு உங்கள் வாக்குகள் என வினவினேன். அதற்கவர் அன்வர் சாதாத்தின் கட்சிக்கே என குறிப்பிட்டர்.காரணம் வினவிய போது பசு மாடு இனாமாக கொடுத்த கதையை கூறி முடித்தார். 

எனவே நைல் நதி மூலம் தமது உள்நாட்டு உற்பத்திகளை பெருக்குவதற்கோ கோதுமையில் தன்னிறைவடைவதற்கோ மேற்கு இடம் கொடுக்காமல் இலவச விநியோகம் என்ற போர்வையில் சார்புநிலை அரசியலை ஏற்படுத்தி இருக்கின்றது.

 தமது எண்ணெய்வ வளங்களின் உற்பத்தி இதுவரை முறைப்படுத்தப்படாமல் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களால் கொள்ளையிடப்பட்டே வந்துள்ளது. எனவே போதிய கல்வியறிவு இன்மையும் மானியங்களில் தங்கி வாழும் மனநிலையும் இராணுவ அடக்கு முறைகளும் சாதாரான மக்களை மௌனிகளாகவே தொடர்ந்தும் வைத்திருந்தது.

இத்தகைய பிண்ணனியில்தான் இஸ்லாமிய இயக்கங்கள்; இஸ்லாமிய ஆட்சியை நோக்கி போராட வேண்டி அமைந்தது.

  இவ்வாரு பல்வேறு அடக்கு முறைகளுக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கின் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் உள்நாட்டின் சர்வாதிகார அடக்கு முறை ஆட்சிக்கும் மத்தியில் இஸ்லாமிய இயக்கம் மீண்டும் இஸ்லாம் என்ற சொல்லை மக்கள் மொழியும் நிலைக்கு நகர்வுகளை மேற்கொன்டமை சமகால சாதனையாகவே கருத வேண்டியுள்ளது. 


முர்சியின் பதவி கவிழ்ப்பு இஹ்வான்களின் இயலாமையா.
தற்போது முர்சியின் பதவி கவிழ்ப்பானது இஹ்வான்களது தோல்வி நிலையாகவும் அரசியல் பற்றிய இஹ்வான்களது அநுபவமின்மையுமே காரனம் எனவும் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

 முர்சி ஆட்சியில் அமர்ந்து ஒரே ஒரு வருடம் ஆகும் நிலையில் இஹ்வான்கள் எதனை சாதித்தார்கள் என்ற கேல்வியும் எழுகின்றது. உண்மையில் கடந்த ஒருவருட காலப்பகுதியில் முர்சி எதிர்கொண்ட சவால்கள் பேசப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

தனிமைப்படுத்தப்பட்ட அரசு: 

முர்சி ஆட்சியில் அமர்ந்த போது மேற்கும், சில இஸ்லாமிய நாடுகலும் இஸ்லாமிய கிலாபத்தின் ஆரம்பமாகவும் தமது கொள்கைகளுக்கும்; ஆட்சிக்கும் எதிரான அஸ்த்திவாரமுமாகவே அதனை கருதின. ஏனெனில் எகிப்தில் ஏற்பட்ட இஸ்லாமிய கட்சியின் பிரசன்னமும் அதனைத்தொடர்ந்து டியுனீசியா,லிபியா, சிரியா, பஹ்ரைன் உள்ளிட்ட அராபிய தீபகட்பத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும்;, துருக்கியின் இஸ்லாமிய கட்சியின் கைகோர்ப்பும் அரபு வசந்தம் என்ற சொல்லாடலினால் பீதியை எற்படுத்தி இருந்தது. 

எனவே எகிப்துக்கான தமது உதவியில் முடிந்தளவு தடைகளை ஏற்படுத்தின. ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்கும் வருமை நிலைக்கும் முகம் கொடுத்திருந்த எகிப்தினால் பாறிய திட்டமொழிவுகளை உடனே வழங்க முடியாமல் போனது என்ற போதும் கைவிரித்தாடிய இலஞ்சம், ஊழல், மேட்டுக்குடி சர்வாதிகார வர்க்கத்திற்கு சார்பான நீதி துறை, சட்டம் ஒழுங்கு என்பன மாற்றியமைக்கப்படவேண்டிய முதன்மை அம்சங்களாக காணப்பட்டது. அம்மாற்றங்களை மெது மெதுவாக செய்து முடிக்கவேண்டிய தேவைப்பாடும் முர்சியின் அரசுக்கு சவாலாக இருந்தது. 

இம்முரண்பட்ட சூழ்நிலையில் இஹ்வான்களது ஆட்சியை கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பங்களை மேற்கும் மேற்கு சார் கைப்பொம்மை முபாரக் ஆதரவாளர்களும் இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்து தருனம் பார்த்தேவந்துள்ளனர்.

 இஹ்வான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக ஷரி;யா சட்டத்தினை அறிவிப்புச்செய்வர் எனவும் அதன் மூலம் தாலிபானிய ஆட்சியாக எகிப்தை சித்தரிக்கவும் எதிர்பார்த்திருந்தனர்.

 இதற்கு அழுத்தக்குழுவாக சலபி சிந்தணை கட்சிகளையும் பயன்படுத்த முனைந்தனர். 

டியூனீசியாவில் சலபிக்களைக்கொண்டு ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்ள திட்டமிட்டது போன்ற விடயங்களில் படிப்பினை கண்டிருந்த இஹ்வான்கள் நிதானமாக செயற்பட்டதுடன் ஷரியா என்ற பெயரை முக்கியத்துவப்படுத்தாமல் ஷரியா சொல்லும் விடயங்களை அரசியல் சட்ட யாப்பு மாற்றம் என்ற போர்வையில் முன்வைக்க முனைந்தனர். இதனால் மேற்கு தோழ்வி கண்டதை கானமுடிந்தது.

 அதனையடுத்து சுயாதீன நீதித்துறையை நிருவும் செயற்பாட்ட்டிற்கெதிராக கிளர்ச்சிகளை மேற்கொள்ள முனைந்து மூக்குடைபட்டுப்போனதும்; குறிப்பிடத்தக்க அம்சம். தொடர்ந்தும் கிரிஸ்தவ - முஸ்லிம் இனக்கலவரங்களை தூண்டிவிட்டு ஆட்சிக்கெதிராக மக்களை தூண்டி விட முற்பட்டனர். 

இது சில வகையில் முர்சியின் ஆட்சிக்கெதிராக கிரிஸ்தவர்களை ஒன்று கூட்டுவதற்கு அத்திவாரமாக அமைந்தது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
எனவே மேற்கின் காய்நகர்த்தல்கள் கவனமாகவே மேற்கொள்ல்ளப்பட்டமையை இராணுவத்தின் பக்கசார்பு நிலைமை வெளிப்படுத்தியுள்ளது.

 முர்சிக்கெதிரான கிளர்ச்சியின் போது தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்று கூடிய பெரும்பான்மை கிரிஸ்தவ குழுக்கல் உள்ளிட்ட முர்சி எதிர்பாளர்கள் ஒவ்வொருவருக்கும்; தலா 300 எகிப்திய பவுன்கள் வழங்கப்பட்டதாகவும் தேவையான உணவு மற்றும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றது. இராணுவம் பூரண வசதிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி இருந்தது. 

300பவுன்கள் என்பது எகிப்தின் சராசரி குடும்பமொன்றின் மாதாந்த வருமானமாகும். எனவே எகிப்திய சனத்தொகையில் குறிப்பாக கெய்ரோ மக்களில் வேலையற்றோர்pல் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு இத்தொகை பாறிய ஒன்றாகும். 

ஏனெனில் எகிப்திய மக்கள் கிளர்ச்சியின் போது (அரபு வசந்தம்) பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்பட்டு இஹ்வான்கள் அதிகப்படியான ஆசனங்களை கைப்பறிய போது அதற்கெதிராக தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்று கூடிய குழுவினரில் ஒருவரை நான் பேட்டி  கண்டேன். 

அவர் ஒரு நாளைக்கு 10எகிப்திய பவுன்களும், ஒரு சாப்பாட்டு பொதியும் கிடைப்பதனால் அங்கு கூடியிருப்பதாக தெரிவித்தார். இவ்வாரான பலரை அன்றய தொலைக்காட்சிகள் பேட்டி கன்டு வெளியிட்டதை குறிப்பிட முடியும்.

முர்சிக்கெதிரான கிளர்ச்சியின் போது இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கின் உளவுத்துறை எதிரணியினருக்கு கச்சிதமாக உதவியும் புரிந்துள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முர்சிக்கெதிரான அணியினரின் முண்ணனி செயற்பாட்டாளர்கள் கள நிலையில் நவீன ஆயுதங்களுடன் செய்மதி தொலை பேசியின் வழிகாட்டலிநூடாக இஹ்வானிய மையங்களை தாக்குவதற்கு வளியமைக்கப்பட்டது.

அத்தோடு முர்சி பதவி நீக்கப்படவுடன் 25முர்சிக்கு சார்பான அலைவரிசைகள் மூடப்பட்டதுடன் ஒரே நேரத்தில் 300க்குமேற்பட்ட இஸ்லாமிய வாதிகள் கைது செய்யப்பட்டதும் திட்டமிட்ட நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.

முர்சியின் தோழ்விக்கான ஏனைய காரனிகள்;:
ஜனதிபதி முர்சி பதவி கவிழ்ப்புக்கு ஏனைய சில காரணிகளும் அடங்கும். இராணுவத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான கட்டமைப்பு மாற்றங்கள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

 இராணுவத்திற்கான சிறப்பு சலுகைகள் கழியாட்ட விடுதிகள் கொண்ட இராணுவ கட்டமைப்பில் இஸ்லாமிய கருத்தியல்களை பூரணமாக உள்வாங்கியவர்களை பதவியில் அமர்த்துவது என்பது சவாலாகவே அமைந்திருந்தது.

 அத்தோடு பொலிஸாரும் முர்சி பதவிக்கு வந்தது முதல் தமது கடமைகளை சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் முனவைக்கப்படுகின்றது. போக்குவரத்து ஒழுங்கு படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கையும் பொலிஸார் எடுக்கவில்லை என்ற அங்களாய்ப்பு பொதுமக்களிடத்தில் முன்வைக்கப்படுகின்றது. 

அத்தோடு முர்சி பதவிக்கு வந்தபின்னர் அதிகரித்த கொள்ளைச்சம்பவங்கள் குற்றச்செயல்களுக்கு உறிய தண்டனையை பெற்றுக்கொடுப்பதிலும் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதிலும் பொலிஸார் தவரியமை மக்கள் அதிருப்திக்கு காரனமாகியது. எகிப்திய சூழ்நிலையில் இவை அரசுக்கெதிரான திட்டமிட இறணுவ செயற்பாடாக இருந்த போதும்; 40மூக்கு மேற்பட்ட எகிப்திய தளம்பு நிலை வாக்காள மக்களைப்பொருத்தவரை அரசின் இயலாமையே என கருதச்செய்தது. 

அதே போன்று முர்சியினால் முனவைக்கப்பட்ட நகரைச்சுத்தப்படுத்தல் 100நாள் செயற்திட்டம் தோழ்வியிலேயே முடிந்ததும் முர்சியின் கொள்கை தொடர்பில் கேள்வியை ஏற்படுத்தியது. எகிப்திய நகரங்களின் சின்னமாக கானப்பட்ட குப்பைகளும் கழிவுகளும் மக்கள் அதற்கு பழக்கப்பட்டவர்கள்; போல் நடப்பதற்கு காரனமாய் அமைந்திருந்தது.

எனவே மக்கள் ஒத்துழைப்பின்மையால் திட்டம் கைவிடப்பட்டாலும் அவை முர்சியின் இயலாமையை சுட்டுவதாக எதிரணியினர் விமர்சனம் செய்யத்தொடங்கினர். எனவே புதிய இஸ்லாமிய ஜனநாயகத்திற்கு பழக்கப்படுத்துதல், உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளின் செயற்பாடுகளினால் தனிமைப்படுத்தப்பட்ட நிலைமை என்பன முர்சி எதிர்கொண்ட பாறிய சவாலாக கானமுடியும்.

இதே வேளை சலபித்துவ சிந்தனை கொண்டவர்களுடனான கருத்தியல் உடண்பாடு எனபதுவும் முர்சி எதிர்கொண்ட சவாலாகவே உள்ளது. 

துருக்கியில் அர்டோகான் தமக்கு முன்னாள் பதவி கவிழ்க்கப்பட்ட அர்பகானின் தோழ்விநிலையின் படிப்பிணைகளை கருத்திற்கொண்டு இஸ்லாம் நோக்கிய நகர்வுகளை கட்சிதமாக கொண்டு செல்லும் யுக்தியை எகிப்திய மண்ணில் முர்சியினால் மேற்கொள்ள முடியாமல் போனது தொடர்பில் இன்னும் இஹ்வான்கள் ஆய்வுக்குற்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

எல்லாவற்றுக்கும் மேலாக எகிப்திய சாதாரண மக்களிடம் கானப்படும் தமக்கு எல்லாம் தெரியும், நான் சொல்வதே சரி என்ற மனோ நிலையில் இருந்து நீதி ஜனநாயகம் குறித்த புறிதழ்களை வழங்குவது என்பது எவ்வளவு கடினமானது என்பது எகிப்திய சூழலை கான்கிறபோது தெரிந்து கொள்ள முடியும். 


எனவே முர்சியின் பதவி கவிழ்ப்பானது இஹ்வான்களது முதல் தோழ்வியாக கருத முடியாது. கமால் அப்துல் நாசரை பதவியில் அமர்த்துவதற்கு இஹ்வானகள் முழு மூச்சாய் செயற்பட்டனர் பின்ன நாசர் இஹ்வான்களை கடுமையாக அடக்கியதும் வரலாற்று படிப்பிணைகள். 

ஐரோப்பாவிலே ஸ்பைன் வீழ்ச்சியோடு 72 இஸ்லாமிய சிற்றரசுகள் அழித்தொழிக்கப்பட்ட போதும் ஐரோப்பாவை விட்டும் இஸ்லாம் துடைத்தெரியப்படவில்லை. இன்றும் உயிர்வாழ்ந்து கொண்டே இருக்கின்றது. 

12வருடங்களில் அடுத்தடுத்து இஸ்லாமிய கலீபாக்கள் கொலை செய்யப்பட்ட போதும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் இடம்பெற்ற பாறிய பிளவுகளான ஜமல் சிப்பீன் யுத்தங்கள் இஸ்லாத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய போதும் இஸ்லாம் இந்த உலகை ஆட்சி செய்ததை வரலாறு பாடமாக சொல்லிக்கொண்டிருக்கின்றது. 

எனவே முர்சியின் பதவி கவிழ்ப்பானது இஸ்லாத்தின் வீழ்ச்சியாக கருதிவிட முடியாது.

 சில போது இஹ்வான்கள் அழித்தொழிக்கப்பட்டாலும் கூட இஸ்லாம் அழிந்துவிடும் என நினைப்பது ஈமானில் கோளாறினை ஏற்படுத்தும். எனவே இஸ்லாம் ஆட்சி பீடம் ஏறுவதற்கு ஒரு வருடமோ அல்லது குகை வாசிகள்; விடயத்தில் குறிப்பிடுவது போன்று 400 வருடங்களோ அதற்கதிகமாகவோ காலம் எடுக்கலாம். 

ஆனால் தற்காழிக பிண்ணடைவுகளை கண்டு முஸ்லிம்கள் ஒரு போதும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கையீனம் கொள்ளமுடியாது. 

தற்போதய எகிப்திய கள நிலைகளை வைத்து நோக்கும் போது நாம் எவ்வித முடிவுக்கும் வரமுடியாத சூழ்நிலை கானப்படுகின்றது. ஏனெனில் ஜனாதிபதி முர்சிக்கு பாதுக்காப்பு வழங்கும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு புதிய ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.

 எகிப்து ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ பாதுகாப்புப் படையணியின் தலைவர் ரிபாஈ தஹ்தாவி, எகிப்து மக்களால் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி முர்ஸி போன்ற கண்ணியமான மனிதரை தமது படையணி ஒரு போதும் புரட்சி இராணுவத்திடமோ முபாரக் ஆதரவு போலீஸிடமோ ஒப்படைக்கப் போவதில்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தள்ளார். 

அத்துடன் அப்படையணி, தற்போது இராணுவப்புரட்சி மூலம் ஜனாதிபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளவருக்கு பாதுகாப்பு வழங்க திட்டவட்டமாக மறுத்து விட்டது. 

எனவே இராணுவத்துக்குள் பிளவுகள் தோன்றுவதற்குமான வாய்ப்பு அதிகம் கானப்படுவதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. அதே போன்று இன்று எகிப்தில் சூரா கவுன்சில் ஜனாதிபதி முர்சியின் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தியது அதில் : இது இரனுவ ஆட்சி கவிழ்ப்பு என்று 211 பேரும் இல்லை என்று 27 பேரும் பின்வாங்கியவர்கள் 33 பேரும் என்ற விகிதா சாரத்தில் முடிவுகள் வெளியாகியுள்ளது.


ஜனாதிபதி முர்ஸிக்கு ஆதராவானவர்கள் ராபியதுல் அதவியாவில் 3மிலியன்களை எட்டியுள்ளதாகவும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் முர்ஸிக்கு ஆதரவான மக்கள் பேரணியாக ராபிஅயதுல் அதவியா நோக்கி ஊர்வலமாக வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

எனவே இவ்விக்கட்டான நிலையில் இராணுவம் சில வேளை தமது முடிவுகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவோ அல்லது மீண்டும் ஒரு தேர்தல் இடம்பெருகின்ற போது இஸ்லாமிய வாதிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கோ வாய்ப்பாக களம் மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 சலபி சிந்தணையாளர்கள் பலரும் தற்போது முர்சிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருவதும் அவதானிக்கத்தக்கது. இதே வேளை பல்வேறு இழப்புக்களுக்கும் மத்தியில் இஹ்வான்கள் சாத்வீக ரீதியில் களமிறங்கியிருப்பது இஹ்வான்கள் மீதான நல்லபிப்பிராயத்தை தொடர்ந்து பேணி வருகின்றது. 

கலாநிதி யூசுப் கர்ளாவி கூட உள்நாட்டு மோதல் தவிர்க்கப்படவேண்டும் என்ற எச்சரிக்கையையும் மறைமுகமாக இஹ்வான்களுக்கு விடுத்துள்ளமையும் மக்களின் சாத்வீகப்போராட்டம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

எனவே இஹ்வான்கள் தமது அரசியல் பயணம் குறித்து மீள்வாசிப்பு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :