13வது திருத்தம் குறித்து இலங்கையில் வீரர்கள் போன்று கூச்சலிட்டு, இந்தியாவுக்குச் சென்று நாய்குட்டிபோல் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்த 13வது திருத்தத்தை அரசாங்கம் இரத்து செய்து காட்டட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட 70-80 வேட்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அதில் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐதேக வேட்பாளர் பட்டியலில் ஆசிரியையை முழங்காலிட வைத்தவர்கள், இலஞ்சம் பெற்றவர்கள் இடம்பெற மாட்டார்கள் என ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
0 comments :
Post a Comment