பறக்கும் மீனால் இராணுவத்திற்கு களங்கம் இல்லை : மங்கள சமரவீர

பாதுகாப்பு அமைச்சால் தடைசெய்யப்பட்டுள்ள பறக்கும் மீன் எனும் திரைப்படத்தால் இலங்கை அர­சாங்­கத்திற்கும் இரா­ணு­வத்­திற்கும் எவ்வித களங்கமும் கிடையாது மாறாக இது மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் செயல் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது இராணுவத்தை அவமதிக்கும் வகையில் பறக்கும் மீன் திரைப்­ப­டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அதற்கு கண்டனம் தெரிவித்து அரசாங்கத்தின் அடிவருடிகள் நேற்று கொழும்பில் அமைந்­துள்ள பிரான்ஸ் தூத­ர­கத்­திற்கு முன்னால் பாரிய ஆர்ப்­பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இது நாட்டு மக்களை முழுக்க முழுக்க ஏமாற்றும் செயற்பாடாகும். கடந்த காலங்களில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் மக்களை ஏமாற்றிய அரசு தற்போது பறக்கும் மீனை வைத்து மக்களை ஏமாற்றுகின்றது.

இத்திரைப்படம் குறித்து நான் திரைப்படத்தின் இயக்குனரான சஞ்ஜீவ புஸ்பகுமார மற்றும் திரைப்பட தயாரிப்புக் குழுவுடன் பேசியுள்ளேன். அதில் எவ்விதத்திலும் இராணுவத்தை அவமதிப்பதாக இல்லை.

எல்லைப்புற கிராமத்தில் தாய், மகள் ஆகியோர் வசித்து வருகின்றனர். அக் கிராமத்தில் கடமையில் உள்ள இராணுவ வீரர், தாய் மற்றும் மகளுடன் தகாத உறவை வைத்துக்கொள்கின்றார். இந்நிலையில் விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்டவர்களை கொலை செய்கின்றனர். இது தான் அத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

இதில் இராணுவம் எவ்வாறு களங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் கொடூரத் தனமான கொலைகளே வெளிப்படுத்தப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :