16வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 30–ந் திகதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சம்பியன் பாகிஸ்தான், நேபாளம், பூட்டான் ஆகிய அணிகளும், ‘பி’பிரிவில் இந்தியா, இலங்கை, பங்காளதேசம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை (25–ந் திகதி) சந்திக்கிறது.
0 comments :
Post a Comment