மரியான் திரை விமர்சனம்

ரத்பாலா இயக்கியிருக்கும் ம‌ரியான் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தனுஷ் மற்றும் பார்வதியின் நடிப்பில் திரையரங்குகளில் பலத்த எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கின்றதென்று சொல்லலாம். இந்தவகையில் தமிழில் சர்வதேச பிரச்சனைகளின் பின்னணியில் படங்கள் வருவதில்லை.

ம‌ரியானில் சூடானில் உள்ள எண்ணைய் எடுக்கும் தொழிற்சாலையில் பணிபு‌ரிகிறவராக தனுஷ் நடித்திருக்கிறார். அவரையும் உடன் பணிபு‌ரிகிற சிலரையும் தீவிரவாதிகள்(கொள்ளைக்காரர்கள்?) கடத்துகிறார்கள். அவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள். 

நமிபியா போன்ற ஆப்பி‌ரிக்க நாடுகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் அண்டர் வாட்டர் காட்சிகள் வருகின்றன. அதனை அந்தமானில் படமாக்கியிருக்கின்றனர். தனுஷ் தண்ணீருக்கு அடியில் நடித்திருக்கிறார்.

சோமாலியா கடற்கொள்ளைக்காரர்களைப் பற்றி செய்திகளில் படித்திருப்போம். அவர்களைப் போன்றவர்கள் எப்படி இருப்பார்கள், எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள் என்பதை ம‌ரியானை பார்த்து தெ‌ரிந்து கொள்ளலாம்.

ஹீரோயின் பார்வதி. ரொமான்டிக் காட்சிகளில் பார்வதியா என்று வாய் பிளக்க வைத்திருக்கிறார். கதைகூட கேட்காமல் பரத்பாலாவின் படத்துக்கு இசையமைக்க சம்மதித்தார் ரஹ்மான். ஏழு பாடல்கள். ஏழுவிதமான உணர்வுகளை தரக்கூடியது. 

முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா ரஹ்மானின் இசையில் பாடியிருக்கிறார். தனுஷ் பாடல் எழுதியிருக்கிறார். குட்டி ரேவதி முதல்முறையாக ஒரு பாடல் எழுதியிருக்கிறார். வாலி, கபிலன் ஆகியோரும் பாடல் எழுதியுள்ளனர். Mark Koninckx என்ற பிரெஞ்ச் கேமராமேன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தயா‌ரிப்பு ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இனி நம்ம விடயத்துக்கு வருவோம். தனுஷ் நடிப்பில் வழமைபோன்றே அசத்துகிறார். பார்வதி மேனன் தமிழுக்கு கிடைத்த சிறந்த நடிகை என்று சொல்லலாம். காதல்,காமம்,கோபம்,ஏக்கம் என்று தனுஷை விட நடிப்பில் விஞ்சுகிறார்.அழகும் செழிப்பும் மிக்க கதாநாயகி..என்ன கொஞ்சம் கும்னு இருக்கிறார்(அது தான் நம்மவர்களின் ரசனையாச்சே,தப்பில்லை!).கொஞ்சம் பிரியாமணி சாயல்..!

ஒளிப்பதிவு அட்டகாசம். அது கடல் சார்ந்த காட்சிகளாகட்டும்,சூடான் பாலைவனமாகட்டும் தமிழுக்கு புதிய ஒளிப்பதிவாளர் ‘மார்க் கோனிக்ஸ்(பெல்ஜியம்) கண்ணுக்கு விருந்து படைத்திருக்கிறார். முக்கியமாக‘கடல்ராசா நான்’ போன்று கடலுடன் சார்ந்து வரும் பாடல்களில் ஒரு வித்தியாசம் தெரிகிறது.தனுஷ்ஷை அழகாக்கியிருக்கிறார்.

படத்தின் இன்னொரு முக்கிய பலம் ரஹ்மானின் இசை.ஏற்கனவே அனைத்து பாடல்களும் ஹிட் என்பதால்,சொல்லி தெரியவேண்டியதில்லை.

தனுஷ்-பார்வதி முத்தம்(வயதுவந்தோருக்கு மட்டும்,மத்தவங்க கண்ண மூடிக்குங்க!)

என்ன கொஞ்சம் மெதுவான திரைக்கதை. இறுதியாக சிங்கம் பார்த்திருந்தால்,இது இன்னமும் மெதுவான திரைக்கதையாக தோன்றக்கூடும்! ரஹ்மானின் பாடல்கள் இன்னமும் வேகத்தை குறைத்தது போன்ற பீலிங்க்.பாடல்கள் வரும்போதே ஆளுக்காள் போனை எடுத்து நோண்ட தொடங்கி விடுகிறார்கள்.சிலர் கொட்டாவி தம்’ன்னு. 

அடுத்து என்ன நடக்கும்னு ஊகிக்கமுடிகின்ற நகர்வுகள்.

இது எல்லாவற்றையும்விட சண்டை,காமெடி மசாலா என்று எதிர்பார்த்து போனால் நிச்சயம் ஏமாற்றும் படம் இது. பெரிய நடிகர் பட்டாளம் எல்லாம் இல்லை,தனுஷ், பார்வதி,தனுஷின் அம்மா உமா ரியாஸ்கான், அப்புக்குட்டி,ஜெகன்,இமாம் அண்ணாச்சி&இரண்டு வில்லன்கள் தான்.எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் ஒருதடவை ரசிக்கலாம்.

ஆக மொத்தத்தில படம் எபவ் ஆவரேஜ் தான். பரத்பாலாவுக்கு முதல் படம் தோல்வி கிடையாது.தனுஷ்க்கு ஒரு ஜஸ்ட் ‘ஹிட்டு’.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :