பொது பலசேனாவின் பொதுக்கூட்டம் கல்முனையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை


(அகமட் எஸ். முகைடீன்)
பொது பலசேனாவின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.07.2013) கல்முனையில் இடம்பெற உள்ளது என்பது ஒரு வதந்தி என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

மேற்படி கூட்டம் கல்முனை மாநகர எல்லைக்குள் நடைபெற ஏற்பாடாகிவருவதாக சிலர் தெரிவித்தனர். இது தொடர்பில் கல்முனை மாநகர முதல்வராகிய நான் பொலிஸாருடன் இணைந்து மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிற்கு சென்று ஆராய்ந்தபோது அவ்வாறான ஒரு ஏற்பாடு இன்றுவரை இல்லை என்பது புலனாகியது.

பல தசாப்த காலமாக யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு தவித்தோம்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அயராத முயற்சியால் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது இதனால் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம் இத்தறுவாயில் கல்முனை மாநகர எல்லைக்குள் இனங்களுக்கிடையில் காணப்படும் நல்லுறவை சீர் குலைக்கும் விதத்தில் எவர் செயற்பட்டாலும் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான சகல முயற்சிகளும் மேற்கொள்வதற்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :