முஸ்லிம்களை நல்ல கண்ணோட்டத்தில் பார்ப்பார் விக்னேஸ்வரன் : மஹ்மூத் பலாஹி

டந்த காலங்­களில் முஸ்லிம் மக்­க­ளுக்கு ஏற்­பட்ட கசப்­பான சம்­ப­வங்­களை நீக்கி முஸ்லிம் மக்­களை அவர் நல்­ல­தொரு கண்­ணோட்­டத்தில் பார்ப்பார் என நாம் நம்­பு­கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைத்தால் எம் இன மக்­க­ளையும் இணைத்துச் செயற்­ப­டு­வார்கள் என்ற நம்­பிக்கை எமக்குண்டு.

முஸ்லிம் தமிழ் மக்­களின் உறவு வலுப்­பெ­று­வ­தாக அவர்­களின் ஆட்சி அமைய வேண்டும். எதிர்­கா­லத்தில் கசப்­பு­ணர்­வுகள் ஏற்­ப­டாமல் பார்த்­துக்­கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணம் முஹம்­ம­திய்யா ஜூம்மா பள்­ளி­வா­யலின் மௌலவி எம்.ஐ. மஹ்மூத் பலாஹி தெரிவித்தார்.


வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் போட்டியிடுவது தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மௌலவி மஹ்மூத் பலாஹி தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்

கடந்த யுத்த காலத்­திற்குப் பின்னர் நாங்கள் தற்­பொ­ழுது சமா­தான காலத்தில் வாழ்ந்து வந்­தாலும் அர­சாங்­கத்­தினால் நாம் கைவி­டப்­பட்ட நிலை­யி­லேயே உள்ளோம். எதிர்­வரும் காலங்­களில் எத்­த­கைய ஆட்சி வந்­தாலும் முஸ்லிம் மக்­க­ளையும் இணைத்துச் செயற்­ப­டக்­கூ­டிய ஆட்­சி­யைத்தான் முஸ்லிம் மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள்.

 எனவே வட­மா­காண சபைத் தேர்­தலில் முத­ல­மைச்­ச­ராக சீ.வி. விக்­னேஸ்­வரன் போட்­டி­யி­டு­வதை நாம் மனப்­பூர்­வ­மாக ஏற்­றுக்­கொள்­கின்றோம்.

சீ.வி. விக்­னேஸ்­வ­ரனைப் பொறுத்­த­வ­ரையில் நல்­ல­தொரு மனிதன். கல்­வியில் சிறந்­தவர். பண்­பா­னவர். நிர்­வாகத் திறமை கொண்­டவர். உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார். 

யாழ்.முஸ்லிம் மக்­களும் அவர் ஆட்­சிக்கு வரு­வதை விரும்­பு­கி­றார்கள். தமிழ் – முஸ்லிம் சகோ­தர ஒற்­று­மை­யையும் அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள். எல்லா இன மக்­களும் சகோ­தர உற­வோடு வாழ வேண்டும் என்­ப­தையே நாங்கள் விரும்­பு­கின்றோம்.

தேர்தல் காலங்­களில் எந்தச் சமூ­கத்­த­வர்­களும் வன்­மு­றை­களில் இறங்­க­வேண்டாம். எவ­ருக்கும் தமக்குப் பிடித்­த­வர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க உரி­மை­யுண்டு. எவ­ரையும் எவரும் வஞ்­சிக்­கக்­கூ­டாது.

தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற அர­சி­யல்­வா­திகள் மக்­களை மக்­க­ளோடு மோத­விட்டு வேடிக்கை பார்த்து தமது சுய இலா­பங்­களைப் பெற்­றுக்­கொள்ள முற்­ப­டக்­கூ­டாது. ஒவ்­வொரு கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களும் ஒரு கட்­சிக்­காக இன்­னொரு கட்­சி­யுடன் மோத­வி­டக்­கூ­டாது. மனி­தத்­து­வத்தை எல்­லோரும் கடைப்­பி­டித்தல் வேண்டும்.

முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள், இந்துக் கோயில்கள் இடிக்­கப்­ப­டு­வ­தையும் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டு­வ­தையும் எமது மதச்­சின்­னங்­க­ளுக்கு முன்னால் பிறி­தொரு மதச் சின்­னங்­களை நிறு­வு­வ­தையும் நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். ஆன்­மீகம் என்­பது மனி­தர்­களின் உரி­மை­யாகும்.

ஒரு­ம­னிதன் உரி­மையை இன்­னொரு மனிதன் சிதைக்­கவோ அழிக்­கவோ கூடாது. பௌத்த தர்மம், பள்­ளி­வா­சல்­க­ளையோ இந்துக் கோயில்­க­ளையோ இடிக்­கவோ கொள்­ளை­ய­டிக்­கவோ சொல்­ல­வில்லை.

அதே­போன்று ஏனைய மதங்­களும் பௌத்த மதத்­தினை வஞ்­சிக்கச் சொல்­ல­வில்லை. ஏன் இப்­ப­டி­யொரு முரண்­பாடு நாட்டில் நிலவுகின்றது என்று எமக்குப் புரியவில்லை. இந்த நாடு எல்ல இன, மத மக்களுக்கும் சமமானது.

எல்லா இன, மத மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றால் நல்லதொரு ஆட்சி அமைதல் வேண்டும். அப்படியொரு ஆட்சியைத் தான் நாங்கள் மட்டுமின்றி எல்லா இன மக்களும் ஆதரிப்பர். 

அந்த வகையில் வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சராகப் போட்டியிடும் சீ.வி. விக்னேஸ்வரனினால் சிறந்ததொரு ஆட்சி யை அமைக்கமுடியும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :