கௌதம் மேனன் படத்தில் சூர்யாவுக்கு பதில் சரத்குமார் நடிப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. சிங்கம் 2 படத்தையடுத்து சூர்யாவிடம் இயக்குனர்கள் கௌதம் மேனன்,லிங்குசாமி கால்ஷீட் கேட்டிருந்தனர்.
யாருக்கு கால்ஷீட் தருவார் என்பதில் இழுபறி நிலவியது. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தொடர்பாக தொழில் நுட்ப சிக்கல் இருப்பதால் அதை சரி செய்துவரும்படி சூர்யா கூறினார்.
இதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் லிங்குசாமி படத்தில் நடிக்க முதலில் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சூர்யா.
அதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் சூர்யாவுக்கு பதிலாக சரத்குமாரை நடிக்க வைக்க கௌதம் மேனன் எண்ணி இருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இதுபற்றி கௌதம் மேனன் கூறும்போது, இன்னும் சில நாள் பொருத்திருந்தால் அனைத்து விவரங்களையும் தருகிறேன் என்றார். துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கிறீர்களா? என்று சரத்குமாரிடம் கேட்டதற்கு, அப்படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் அடுத்த வருடம் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளேன்.
இது மிகவும் ரசனையான ஸ்கிரிப்ட். கடந்த வருடமே இது பற்றி இருவரும் பேசி இருக்கிறோம். விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன் என்றார்.
ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத் நடித்திருக்கிறார்.
0 comments :
Post a Comment