சிலாவத்துறை கமநல சேவை நிலையம் எங்கே?

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

ரெட்,எனும் சினிமாப்படத்தில் அத்திப்பட்டிஎனும் கிராமம் காணாமல்போனகதைபோலவே,சிலாவத்துறையில் இருந்த கமநிலையம் காணாமல் போய்விட்டது.யுத்தத்தால் வடக்கில் இருந்த பல அரசநிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.பின்னர் பெரும்பாலானவைமீள்நிர்மானம் செய்யப்பட்டுள்ளன.

முசலிப்பிரதேச செயலகப்பிரிவில் இரண்டு கமலநலசேவை நிலையங்கள் இருந்தன.அவற்றில் ஒன்று வேப்பங்குளத்திலும்,மற்றையதுதம்பட்டமுசலிகட்டுச் சந்திசிலாவத்துறையில் அமைந்திருந்தது.இவ்விருநிலையங்களும் குழுக்களைச்சிறப்பாகஅமைத்துவிவசாயிகளுக்குப் பின்வரும் சேவைகளை வழங்கி வந்தன.

விவசாய்களுக்குஆலோசனைவழங்கல்
மானியஅடிப்படையில் உழவு இயந்திரசேவைவழங்குதல்
பசளைவினியோகம் செய்தல்
எண்ணெய் தெளிகருவிகள் வழங்குதல்
விதைநெல் வழங்குதல்

ஆனால் 1990 இன் பின்பு இவ்விருநிலையங்களும் அழிக்கப்பட்டிருந்தன.மக்களின் மீள்குடியேற்றத்தின் பின்பு வேப்பங்குளம் கமநலசேவைநிலையம் அதே இடத்தில் மீள் நிர்மானம் செய்யப்பட்டுவிட்டது . சிறந்தசேவையைஅந்நிலையம் வழங்கி வருகிறது.இதற்குஅமைச்சர்களால் பல உழவு இயந்திரங்;;கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ளஉழவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு விவசாயிகளுக்கும்,அதிகாரிகளுக்கும் உண்டு.இவ்வாகனங்கள் நீண்டகாலமாகவெயிலிலோ,மழையிலோ நிறுத்தி வைக்கப்படுமாயின் அவை பழுதடையும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.ஆகவே,வாகனத்தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுஅதனுள்ளேஉழவு இயந்திரங்கள்,பெட்டிகள் என்பன நிறுத்தப்படவேண்டும்.இவை சிறப்பாகப் பாதுகாக்கப்படும்போதுதான் விவசாயிகளுக்குசிறந்தசேவைகிடைக்கும்

முசலியின் தென்பகுதிக்கிராமங்களுக்கு, உரிய சேவைகள் கிடைக்கவேண்டுமென்றால் உடனடியாகமுசலிதெற்குகமநலசேவைநிலையம் அது முன்பு இருந்த பிரதேசத்தில் மீள் நிர்மானம் செய்யப்படவேண்டும்.முசலிதெற்குப்பிரதேசவிவசாயிகள் வேப்பங்குளம் கமநலசேவைநிலையத்திற்குச் செல்வதனால் சில நெருக்கடிகளும்,அசௌகரியங்களும் ஏற்படுகின்றன.
ஆகவே, இச்சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1990 இற்கு முன்பு இருந்ததுபோல சிலாவத்துறை கமநலசேவைநிலயத்தைமீளநிர்மானித்துத் திறக்கஅரசியல்வாதிகளும்,மன்னார் மாவட்டவிவசாயப்பணிப்பாளரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவிவசாயிகள்கோரிக்கைவிடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :