வட மாகாண சபையில் முஸ்லிம் மக்கள் கட்சி (முன்னாள் உலமா கட்சி) போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைக்கா தேர்தலில் முஸ்லிம்களுக்காக சுதந்திரமாக குரல் கொடுப்பதற்கும், முழு இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக இடம் பெறும் இனவாதங்களுக்கெதிராக ஜனநாயக ரீதியில் முஸ்லிம்களின் எதிர்ப்பை எடுத்துக்காட்டவும் இந்த தேர்தலில் தமது கட்சி போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க தேர்தலில் போட்டியிட விரும்பும், விலை போகாத சமூகப்பற்றாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் தமது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை குறித்து 0775449017 என்ற இலக்கத்துக்கு எஸ் எம் எஸ் அனுப்பும்படியும் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment