அப்துல் ஹமீட்
மட்டக்களப்பு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும் காத்தான்குடிப் பொலிஸாரும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்;குட்பட்ட மட்டக்களப்பு நொச்சிமுனை கலைமகள் வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட ஐந்து ஆமைகள் மற்றும சுமார்; 9அடி நீளமுள்ள மலைப்பாம்பொன்றும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று 18ம் திகதி காலை மட்டக்களப்பு நொச்சிமுனை கலைமகள் வீதியிலுள்ள விடொன்றிலேயே குறித்த அருகி வரும் ஆமை இனத்தைச் சேர்ந்த ஐந்து ஆமைகளும் சுமார் 12வருடமாக வளர்க்கப்பட்டு வந்த சுமார் 9அடி நீளமான பாரிய மலைப்பாம்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் குமாரியிடம் கேட்ட போது,
நான் பல வருடங்களாக கோழி மற்றும் இவற்றை வளர்த்து வருவதாகவும் இவற்றைப் பார்வையிடுவதற்கு நிறையப் பேர் வீட்டுக்கு வருவதாகவும் இப்படி வளர்ப்பது சட்டவிரோதமானது என்பது தனக்கு தெரியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் விசாரணையை மேற்கொள்வற்காக ஸ்தலத்திற்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் இதனை வளர்த்து வந்த வீட்டு உரிமையாளர் குமாரி அக்காவை காத்தான்குடி பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று வியாழக்கிழமை சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட ஐந்து ஆமைகளையும் சுமார் 9அடி நீளமுள்ள மலைப்பாம்பையும் மட்டக்களப்பு நீதி மன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment