நீதியரசர் விக்னேஸ்வரனின் நியமனத்திற்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு : வாசுதேவ நாணயக்கார

மாகாண சபை முறைமையை எதிர்ப்பவர்கள் எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் மக்கள் வாக்களிக்காது பகிஷ்கரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமென்ற பிரசாரத்தை முன்னெடுப்பார்களா?

 என சவால் விடுக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு நியமித்ததை புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகளுக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,

விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தமையை புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் விரும்பவில்லை. அவர்கள் இத் தேர்வை எதிர்க்கின்றனர்.

ஏனென்றால் விக்னேஸ்வரன் மிதவாதக் கொள்கையைக் கொண்டவர் மட்டுமல்லாது, பிரிவினைக்கு எதிரானவர். எனவே, புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

எது எப்படியாயினும் எமது கட்சி அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றது. வடக்கில் வெற்றி பெறும் திட்டங்களுடனேயே போட்டியிடுகின்றோம். அரசாங்கத்தின் அபிவிருத்திகள் வடக்கில் எமக்கு வெற்றி கிடைத்தால் துரிதப்படுத்தப்படும்.
மாகாண சபையை எதிர்ப்பவர்களுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் மக்கள் சிறந்த பாடம் புகட்டுவார்கள். மக்கள் இத் தேர்தலில் வழங்கும் பல இலட்சம் வாக்குகள் மாகாண சபையை எதிர்ப்பவர்களுக்கு சிறந்த பதிலாகும்.

மாகாண சபையை எதிர்ப்பவர்கள் தமது எதிர்ப்பு உண்மையானால் இம் முறை மாகாண சபை தேர்தல் பிரசாரங்களின் போது மக்கள் முன் சென்று தேர்தலை பகிஷ்கரிக்குமாறும் வாக்களிக்க வேண்டாமென்றும் பிரசாரம் செய்ய வேண்டும்.

எதிர்ப்பவர்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன். முடிந்தால் எதிர்த்து பிரசாரம் செய்யுங்கள். ஆனால், என்ன வேடிக்கையென்றால் மாகாண சபை முறைமையை எதிர்ப்பவர்கள்

தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது வேட்பாளர்களை அதிகளவு போட்டியிடச் செய்வதற்கு முட்டி மோதிக்கொள்கின்றனர்.

மாகாண சபை முறைமையை நீதிமன்றத்தால் ஒழிக்க முடியாது. இது தொடர்பில் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை மட்டும் பாராளுமன்றத்திற்கு வழங்க முடியும். இறுதி முடிவை பாராளுமன்றமே எடுக்க வேண்டும். ஏனென்றால் பாராளுமன்றமே இறையாண்மை கொண்டது.

அத்தோடு 13ஆவது திருத்தம் இலங்கை அரசியலமைப்பில் சட்டமாக உள்ளது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :